அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் ‘விலங்குகள்’ – டிரம்ப்

Facebook Cover V02
trump11வெள்ளை மாளிகையில் நடைபெற்ற  அரசியல் தலைவர்கள் மற்றும் கலிபோர்னியாவில் இருந்து சட்ட அமலாக்க அதிகாரிகள் கலந்து கொண்ட  வட்டமேஜை கூட்டத்தில்  அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசும்போது கூறியதாவது:-
சட்டவிரோதமாக மக்கள் நாட்டிற்கு வருவதை வர முயற்சிப்பதை  நாம் வெகுவாக நிறுத்தி இருக்கிறோம். அப்படி வருபவர்களை  நாட்டை விட்டு வெளியேற்றுகிறோம்.  இந்த மக்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று நீங்கள் நம்பமாட்டீர்கள். இவர்கள் மக்கள் அல்ல  விலங்குகள்.
பலவீனமான சட்டங்களின் காரணமாக அவர்கள் நாட்டிற்குள் விரைந்து  வருகிறார்கள். நாம் பிடிக்கிறோம், விடுதலை செய்கிறோம்  மீண்டும் பிடிக்கிறோம் மீண்டும் அவர்களை விடுதலை செய்கிறோம் இது பைத்தியக்காரத்தனம்.
முட்டாள் சட்டங்களால் நாட்டில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் வருகை அதிகரிக்கிறது.
கலிஃபோர்னியா சட்டமானது சட்டவிரோதமாக குடியேறிய குற்றவாளிகள், போதைப்பொருள் விற்பனையாளர்கள்,  வன்முறை கும்பல்  ஆகியோரை  விடுவிப்பதை கட்டாயப்படுத்துகிறது.
அமெரிக்காவிற்கு  சட்டபூர்வமாக மற்றும் தகுதி அடிப்படையில் மக்கள் வர வேண்டும்.
நாங்கள் தகுதி அடிப்படையில் நமது நாட்டிற்கு வர வேண்டும் என விரும்புகிறோம். அவர்கள் நமக்கு தேவை, அவர்களுக்கு நாம் தேவை,  நாம் அவர்களை உள்ளே கொண்டு வருகிறோம்.
அமெரிக்காவிற்கு முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் நிறுவனங்கள் மீண்டும் வருகின்றன. மெக்சிகோவிலிருந்து சில நிறுவனங்கள் வருகின்றன என கூறினார்.

Share This Post

Post Comment