ஷீலா தீட்சித் கொண்டிருந்த அதிகாரத்தில் 10% கூட எனக்கு கிடையாது, மோடி அரசு பறித்துவிட்டது – கெஜ்ரிவால்

kejriwalடெல்லியில் போராட்டம் நடத்திவரும் முதல்-மந்திரி கெஜ்ரிவால் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்து பேசினார். அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், நாங்கள் 6 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறோம், எங்களுக்கு இது மகிழ்ச்சியானது கிடையாது. இந்நடவடிக்கையை எடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு உள்ளோம். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 3 மாதமாக வெறுமனே அலுவலகம் வருகிறார்கள், ஆனால் எந்தஒரு பணியும் செய்வது கிடையாது. நாங்கள் அழைப்பு விடுத்தாலும் எந்தஒரு பணியும் செய்வது கிடையாது. கவர்னரிடம் புகார் அளித்தோம், ஆனால் எந்தஒரு நடவடிக்கையும் இதுவரையில் கிடையாது என்று கூறியுள்ளார். போராட்டத்திற்கு ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் அனைத்திற்கும் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
  டெல்லியில் இதுபோன்ற அரசியலமைப்பு நெருக்கடி எதுவும் வரலாற்றில் ஏற்படவில்லை. பிற முதல்-மந்திரிகள் அரசை நடத்தும் போது, உங்களால் மட்டும் ஏன் முடியவில்லை? இதற்கு யார் பொறுப்பு? என்ற விமர்சனம் உள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்து பேசிய அரவிந்த் கெஜ்ரிவால்,
இந்த கேள்வி என்னிடம் பலமுறை கேட்கப்பட்டது. முன்னாள் முதல்-மந்திரி ஷீலா தீட்சித் அதிகாரம் குறித்து பேசுகையில், அவரிடம் இருந்த அதிகாரத்தில் 10 சதவிதம் கூட எனக்கு கிடையாது. அதிகாரிகளை மாற்றுவது, இடமாற்றம் செய்வது, குற்றம் செய்பவர்களை சிறைக்கு அனுப்புவது என்பதில் எந்தஒரு அதிகாரமும் கிடையாது. மோடி அரசு எங்களிடம் இருந்து இந்த அதிகாரங்களை பறித்துக்கொண்டது. இப்போது, அதிகாரிகளை டெல்லி முதல்-மந்திரி சஸ்பெண்ட் செய்ய முடியாது, சிறைக்கும் அனுப்ப முடியாது.  இதுபோன்ற நடவடிக்கை எங்கள் மீது எடுக்கப்படுவது ஏன்? என்று நாங்கள் யோசிக்க வேண்டியது உள்ளது. சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நல்லவர்கள். அவர்கள் பணியை செய்தால் மிரட்டப்படுவதாக எங்களிடம் சொல்கிறார்கள், அவர்களுடைய வாழ்க்கை பாதிக்கும். இது ஏன் நடக்கிறது? கடந்த மூன்று ஆண்டுகளாக நாங்கள் சிறப்பாக பணியாற்றுகிறோம் என்பதனால்தான். பள்ளி, மருத்துவமனை என பலவற்றில் சிறப்பான பணியை மேற்கொள்கிறோம்.
அரவிந்த் கெஜ்ரிவாலால் பள்ளிகளை சிறப்பான நிலைக்கு கொண்டுவரும் போது, 15 ஆண்டுகள் மத்திய பிரதேசத்தில் ஆட்சி, 20 ஆண்டுகள் குஜராத்தில் ஆட்சியென இருந்த பா.ஜனதாவால் இதனை செய்ய முடியாதது ஏன்? என மக்கள் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டார்கள். இதனால் பா.ஜனதாவிற்கு அழுத்தம் ஏற்பட்டு உள்ளது. என் ஆட்சியைத் தடுக்கிறார்கள் என்பதால் நான் இப்போது இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். வேலைநிறுத்தம் முடிவடையும் வரை நான் இங்கிருந்து செல்லமாட்டேன் என கூறிஉள்ளார்.





Related News

  • எங்களின் பலம் தெரியப்படுத்த வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் -சரத்குமார்
  • கட்சியின் கொடி, பெயர் அறிவிக்கப்பட தாமதமாகும் -ரஜினி
  • தமிழகம், கேரளாவில் 2 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு
  • சபரிமலையில் 200 பேர் மீது வழக்கு – போலீசார் குவிப்பு
  • ராம் லீலாவில் ராவணன் வேடம் அணிந்தவரும் ரெயில் விபத்து பலி
  • விவசாயிகளின் ரூ.5.5 கோடி கடனை அடைக்க முன்வந்தார் அமிதாப் பச்சன்
  • சபரிமலை அய்யப்பன் கோவிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு – தலைமை தந்திரி அறிவிப்பு
  • சபரிமலைக்குள் செல்ல முயன்ற சர்ச்சைக்குரிய பெண்ணியவாதி ரஹானா பாத்திமா – போலீஸ் மீது அரசு காட்டம்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *