மருத்துவர்கள் போராட்டம் – சென்னை ஆஸ்பத்திரிகளில் பாதிப்பு இல்லை

doctors_strikeஇந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவை கடந்த வெள்ளிக்கிழமை மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஜே.பி.நட்டா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இது மக்கள் நலனுக்கு எதிரானது என்றும், மருத்துவ, சுகாதார பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் இந்திய மருத்துவ சங்கம் கூறி வந்தது.
2 லட்சத்து 77 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட இந்திய மருத்துவ சங்கம், தேசிய மருத்துவ ஆணைய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நேற்று போராட்டத்தை நடத்தினர். இதற்கு பலம் சேர்க்கும் வகையில் நேற்று காலை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தினர் காலை 9 மணி முதல் 10 மணி வரை புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:-
தேசிய மருத்துவ ஆணைய மசோதாவால் உள்நாட்டில் இருக்கும் மருத்துவர்களின் உரிமை கடுமையாக நசுக்கப்படும். இந்த மசோதா கொண்டு வரப்பட்டால் போலி மருத்துவர்கள் அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. விழிப்புணர்வுக்காக மட்டுமே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
இந்த போராட்டத்தால் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதைப்போல் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளிலும் மருத்துவர்கள், புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடந்தது. இதனால் நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
சில ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சென்னையை பொறுத்தவரை பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடாமல் தங்கள் பணியை தொடர்ந்தனர். இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் 30-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவை ஒரு மணி நேரம் புறக்கணித்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அனைவரும் கருப்பு ‘பேட்ஜ்’ அணிந்து வேலை செய்தனர்.

Related News

 • முஸ்லிம் ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்டார் ரஹானா
 • ஜெயலலிதாவின் இறுதி சடங்கிற்கு அரசு செலவு எவ்வளவு?
 • திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 2வது நாளாக ஆய்வு
 • இந்திய துணை கண்டத்தில் அதிக திட்டங்களை கொண்டு வந்தது ஜெயலலிதா அரசு
 • தீபாவளி சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் இல்லை
 • மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு லாயக்கில்லை – எடப்பாடி பழனிசாமி
 • எங்களின் பலம் தெரியப்படுத்த வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் -சரத்குமார்
 • கட்சியின் கொடி, பெயர் அறிவிக்கப்பட தாமதமாகும் -ரஜினி
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *