குகைக்குள் மறைத்து வைத்து 15 வருடங்களாக சிறுமியை கற்பழித்த மந்திரவாதி கைது

Facebook Cover V02

Keeping-Woman-As-Sexஇந்தோனேசியாவில் வசித்து வரும் ஒரு தம்பதி கடந்த 15 வருடங்களுக்கு முன் தங்களது 13 வயது மகளை வீட்டிற்கு அருகே இருந்த பேய் விரட்டும் மந்திரவாதி ஒருவரிடம் சிகிச்சைக்காக கொண்டு சென்று விட்டு உள்ளனர்.

ஆனால் அதன்பின் அவளை காணவில்லை.  இதுபற்றி பெற்றோரிடம், அவள் வேலை தேடி ஜகார்த்தா நகருக்கு சென்று விட்டாள் என மந்திரவாதி கூறியுள்ளார்.  அதன்பின் பெற்றோரிடம் அவள் தொடர்பு கொள்ளவில்லை.

இந்த நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, மந்திரவாதியின் வீட்டிற்கு அருகே இருந்த குகை ஒன்றில் இருந்து 28 வயது இளம்பெண் ஒருவர் மீட்கப்பட்டு உள்ளார்.

அவரிடம் நடந்த விசாரணையில், மந்திரவாதி சிறுமியிடம் தன்மேல் ஆம்ரின் என்ற சிறுவனின் ஆவி புகுந்துள்ளது என கூறியுள்ளார்.  அதன்பின் ஒரு புகைப்படத்தினை காட்டி அதனை ஆம்ரின் என கூறியுள்ளார்.

இவன் உனது ஆண் நண்பன் என கூறி சிறுமியை நம்பவைத்து உள்ளார்.  சிறுமியை குகைக்குள் மறைத்து வைத்துள்ளார்.  பகலில் குகையில் இருந்து விட்டு இரவில் மந்திரவாதியின் வீட்டிற்கு அருகே உள்ள குடிசையில் சிறுமி தங்கி இருந்துள்ளார்.

குகைக்குள் தங்கி இருந்த 15 வருடங்களாக சிறுமியை மந்திரவாதி கற்பழித்து உள்ளார்.  தொடர்ந்து கர்ப்பம் ஏற்படாமல் தடுக்க பலமுறை மருந்து கொடுத்து உள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சிறுமி காணாமல் போனது பற்றி சிறுமியின் சகோதரிக்கு தெரிந்திருக்க கூடும் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.  ஏனெனில் மந்திரவாதியின் மகனுக்கு சகோதரி திருமணம் செய்து கொடுக்கப்பட்டு உள்ளார். இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் மந்திரவாதிக்கு 15 வருட சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

கிராமத்தில் பிரபலமடைந்த அந்த மந்திரவாதியிடம் இதுபோன்று பலர் சிக்கி இருக்க கூடும் என அந்நாட்டின் பெண் வன்கொடுமைக்கு எதிரான தேசிய ஆணைய தலைவி சிதோரஸ் கூறியுள்ளார்.

Share This Post

Post Comment