ஆகஸ்டு 14ல் திமுக அவசர செயற்குழு கூட்டம்

anna-arivalayamவரும் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்டு, 14ம் தேதி) திமுக அவசர செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக, திமுக பொதுச்செயலர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை கலைஞர் அரங்கில் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடக்கும். இதில் செயற்குழு உறுப்பிர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனக்கூறியுள்ளார். கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க இந்த கூட்டம் நடக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில், பொதுக்குழு கூட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் என தெரிகிறது.

பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவது பற்றி பேசப்படலாம் என தெரிகிறது.

முன்னதாக ஸ்டாலின், திமுக பொதுச் செயலர் அன்பழகனை அவரது வீட்டில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, ராஜா, துரைமுருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

திமுக.,வின் அவசர செயற்குழு எதற்கு என்பது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திமுக செயற் தலைவர் ஸ்டாலின், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கவே அவசர செயற்குழு கூட்டம். கருணாநிதி நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்தவும், பார்வையாளர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.






Related News

  • சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு
  • அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை
  • கஜா புயல் – 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
  • சத்தீஷ்கார் சட்டசபை தேர்தல் – மதியம் 2 மணிவரை 37.61 சதவீத வாக்குகள் பதிவு
  • சபரிமலை சம்பவம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு முடிவு
  • பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்
  • கஜா புயல் எதிரொலி – 8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு
  • கஜா புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நாளை ஆலோசனை
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *