சசிகலாவை சந்திப்பதற்காக பெங்களூரு சென்ற தினகரன் சென்னை திரும்பினார்  

Facebook Cover V02
ttvdinakaran18சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சசிகலாவின் உறவினர் மகாதேவன் சில தினங்களுக்கு முன்பு மரணம் அடைந்தார். அவருடைய உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சசிகலா பரோலில் வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் இதற்கு சிறை நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
அ.தி.மு.க. பிளவுபட்டு சசிகலா அணி அ.தி.மு.க.(அம்மா) என்றும், ஓ.பன்னீர்செல்வம் அணி அ.தி.மு.க.(புரட்சித்தலைவி அம்மா)என்றும் 2 அணியாக செயல்பட்டு வருகிறது. இதற்கிடையே அ.தி. மு.க. சசிகலா அணியில் உள்ள மந்திரிகள் சிலர், துணை பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யுமாறு டி.டி.வி.தினகரனை வலியுறுத்தி வருவதாகவும், அதை அவர் நிராகரித்து விட்டதாகவும் சசிகலா தரப்பு அணியில் உள்ள மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பலர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு செல்ல உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை, துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று சந்தித்து பேச இருப்பதாக சொல்லப்பட்டது. இதனால் பத்திரிகையாளர்கள் சிறை முன்பு குவிந்தனர். பகல் 2 மணியளவில் டி.டி.வி.தினகரன் வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் நேற்று மாலை வரை அவர் வரவில்லை. இதனால் செய்தி சேகரிக்க வந்திருந்த பத்திரிகையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இந்த நிலையில், பெங்களூருவில் இருந்து டிடிவி தினகரன் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய டிடிவி தினகரன்  தனது அடையாறு இல்லத்தில் வழக்கறிஞர் தீனசேனனுடன் அவசர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share This Post

Post Comment