சினிமா டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி

Thermo-Care-Heating
Ticket-priceசினிமா டிக்கெட் கட்டணத்தை 25% வரை உயர்த்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

* மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சம் ரூ.150 ரூபாயும், குறைந்தபட்சம் ரூ.15 டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* தற்போது ரூ.120-ஆக உள்ள டிக்கெட் விலை ரூ.150-ஆகவும், ரூ.95-ஆக உள்ள டிக்கெட் விலை ரூ.118.80-ஆகவும், ரூ.85ஆக உள்ள டிக்கெட் விலை ரூ.106.30-ஆகவும், ரூ.10-ஆக உள்ள டிக்கெட் விலை ரூ.15-ஆகவும் நிர்ணயம் செய்ய அனுமதி. வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சினிமா தியேட்டர்களுக்கு கடந்த 27-ந்தேதி முதல் தமிழக அரசு உள்ளாட்சி வரி விதித்துள்ளது.

ஏற்கனவே ஜி.எஸ்.டி. வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சி வரியும் விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த இரட்டை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கேளிக்கை வரியை முழுவதுமாக ரத்து செய்ய வலுயுறுத்தி புதிய படங்களை திரையிடுவது இல்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ideal-image

Share This Post

Post Comment