தினகரனை அழைக்கவில்லை பாதைமாறி சென்றவர்களை அழைத்தோம் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் சென்னை திரும்பும் வழியில், மதுரை விமான நிலையத்தில், நிருபர்களுக்கு பேட்டி அளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்ட புகார் பொய்யானது; வழக்கை சொந்தமாக வாதாடி தடை பெற்றுள்ளேன். திமுகவினர் மீதான ஊழல் வழக்குகளை மறைப்பதற்காக,எங்கள் மீது வழக்கு தொடருகிறார்கள். ஜெயலலிதா இல்லாத காரணத்தினாலேயே, எங்களை பயமுறுத்தி, ஆளும் அதிமுக அரசு மீது களங்கத்தை ஏற்படுத்த, எதிர்க்கட்சிகள் முயற்சிக்கிறார்கள். கட்சி உடையும், ஆட்சி கலையும் என எதிர்பார்த்தார்கள், ஆனால் நடக்கவில்லை!

அதிமுக நிர்வாகிகள் சிலர் பாதை மாறி சென்றுள்ளனர்; அவர்கள் திரும்பி வர வேண்டும்; தினகரனுக்கு அதிமுக அழைப்பு விடுக்கவில்லை!.

காவிரி பாசனம் பெறும் மாநிலங்களுக்கு இடையே ஒத்த கருத்து இருந்தால் மட்டுமே, புதிய அணை கட்ட முடியும். பட்டாசு வெடிப்பதற்கான நேரம் தொடர்பான வழக்கில் அனைத்து தரப்பினர் கருத்தையும் கேட்டு முடிவு செய்யப்படும். பட்டாசு வழக்கில், தமிழ்நாடு அரசின் மனுவின்படியே உச்சநீதிமன்றம் தற்போது அனுமதி வழங்கியிருப்பதாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார்.


Related News

 • பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்
 • மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்
 • இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது
 • உலகின் உயரமான வல்லபாய் படேல் சிலைக்கு நிதியுதவி வழங்கியது யார்?
 • ஆயுதங்களை பயன்படுத்தாத சதிப்புரட்சியே இலங்கையில் அரங்கேறுகிறது – சபாநாயகர்
 • புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்புக்கு உட்பட்டது
 • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
 • தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க கடுமையாக உழைப்பேன் – டக்லஸ்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *