திவாகரன் கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பறிமுதல்

Thermo-Care-Heating

divakaran_collegeதிவாகரன் கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள சுந்தரகோட்டையில் இயங்கி வரும் செங்கமல நாச்சியார் கல்லூரியில் சோதனை நடைபெற்றது. திவாகரனுக்கு சொந்தமான இக் கல்லூரியில் இருந்து 200க்கும் மேற்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திவாகரன் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

ல்லூரியில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை நான்கு கார்கள் மூலம் சென்னை கொண்டு செல்ல அதிகாரிகள் திட்ட மிட்டு உள்ளதாகவும், ஆவணங்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்காக போலீஸ் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ல்லூரியில் நடத்தப்பட்ட சோதனையின் போது அங்கு பணி புரியும் ஊழியர்களில் எட்டு பேரிடம் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்தினர்.மேலும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்ட வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறை நடத்தி வரும் சோதனை ஒரிரு இடங்களில் முடிவுற்றுள்ளது. இந்நிலையில் கோட நாடு எஸ்டேட்டில் நடத்தப்பட்டு வந்த சோதனை நாளையும் தொடரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ideal-image

Share This Post

Post Comment