டாக்கா விமான நிலையத்தில் தங்க கட்டிகளுடன் இந்தியர் சிக்கினார்

golden-biscuitவிமானத்தில் ஒருவர் ஏராளமான தங்க கட்டிகளை கடத்தி வருவதாக டாக்காவில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இந்த நிலையில் அந்த விமானத்தில் இருந்து இறங்கி வந்த ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் வழிமறித்து சோதனை போட்டனர்.

அப்போது அவர் 12 கிலோ 300 கிராம் எடை உள்ள 22 தங்க கட்டிகளை தன் உடலில் மறைத்து எடுத்து வந்து இருப்பதைக் கண்டனர். அவற்றை அவர்கள் கைப்பற்றினர்.

அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அவர் இந்தியர் என்பதுவும், அவரது பெயர் அர்‌ஷத் அயாஸ் அகமது (வயது 46) என்பதுவும் தெரியவந்தது.

அவரை சுங்கத்துறை அதிகாரிகள், டாக்கா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர் மீது வங்கதேச சுங்கத்துறை சட்டம் 1969–ன் கீழும், சிறப்பு அதிகார சட்டம் 1974–ன் கீழும் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்கத்துறை துணை கமி‌ஷனர் ஓதெல்லோ சவுத்ரி தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்டு உள்ள தங்க கட்டிகள் இந்தியாவில் சுமார் ரூ.3 கோடியே 69 லட்சம் மதிப்பு கொண்டவை ஆகும்.






Related News

  • ஆடையில் தீவைத்து கொண்டு லெஸ்பியன் திருமணம்
  • 6 மணி நேரம் தூங்கினால் ரூ.42 ஆயிரம் ஊக்கப்பரிசு
  • புகாரை பொய் என நிரூபிக்க பிறப்புறுப்பை அறுத்த சாமியார்
  • 7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை – ஆதாரம் உள்ளது துருக்கி
  • நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுத்த தண்டனை தான் – 129 வயது பாட்டி
  • நண்பரை கத்திரியால் குத்தி கொலை செய்த சலூன் கடைக்காரர்
  • படிப்பிற்கு வயது தடையில்லை; நிரூபித்துக் காட்டிய முதியவர்
  • உலகில் மோசமான குற்றவாளிக்கு 22 ஆண்டு சிறைத்தண்டனை
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *