டென்மார்க்கை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது பிரேசில்

Olympic--300x170ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான கால்பந்து போட்டியில் 16 அணிகள், 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. ஏ பிரிவில் நடந்த கடைசி லீக்கில் போட்டியை நடத்தும் பிரேசில் அணி 4-0 என்ற கோல் கணக்கில் டென்மார்க்கை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. கேப்ரியல் பார்போசா (2 கோல்), கேப்ரியல் ஜீசஸ், லுவான் ஆகியோர் பிரேசில் அணியில் கோல் அடித்தனர்.

தென்ஆப்பிரிக்கா மற்றும் ஈராக்குக்கு எதிராக கோல் எதுவும் அடிக்காமல் டிரா கண்டதால் பிரேசில் அணியினர் மீது உள்ளூர் ரசிகர்கள் வெறுப்பை காட்டினர். தற்போதைய வெற்றி, ரசிகர்களின் கோபத்தை தணித்திருக்கும். இரண்டு முறை (2004, 2008) சாம்பியனான அர்ஜென்டினா அணி தனது கடைசி லீக்கில் (டி பிரிவு) ஹோண்டுராசுடன் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியுடன் களம் இறங்கியது. எதிரணி இரண்டு பெனால்டி வாய்ப்பை தவற விட்ட போதிலும், அர்ஜென்டினா அணியால் கடைசி நிமிடத்தில் கோல் அடித்து டிரா மட்டுமே (1-1) செய்ய முடிந்தது.

‘டி’ பிரிவில் போர்ச்சுகல் (7 புள்ளி) முதலிடத்தையும், ஹோண்டுராஸ், அர்ஜென்டினா தலா 4 புள்ளிகளுடன் அடுத்த இடத்திலும் இருந்தன. கோல் வித்தியாசம் அடிப்படையில் ஹோண்டுராஸ் கால்இறுதி வாய்ப்பை பெற்றது. அர்ஜென்டினா ‘வீட்டுக்கு’ அனுப்பப்பட்டது. சி பிரிவில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட நடப்பு சாம்பியன் மெக்சிகோவும் லீக் சுற்றுடன் காலியானது. நாளை நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் போர்ச்சுகல்-ஜெர்மனி, நைஜீரியா-டென்மார்க், தென்கொரியா-ஹோண்டுராஸ், பிரேசில்- கொலம்பியா ஆகிய அணிகள் மோதுகின்றன


Related News

 • அமெரிக்க அதிபருக்கு, அடிப்படை நாகரீகம் கூட இல்லை – பிரான்ஸ் கண்டனம்
 • சிங்கப்பூரில் இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் சந்தித்து பேச்சுவார்த்தை
 • இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை ஏற்படும் – சீனா நம்பிக்கை
 • பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலையில் இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு தொடர்பு நேரடி ஆதாரம்?
 • சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகள் 4.3 லட்சம் சைபர் தாக்குதல்களை இந்தியாவில் நடத்தி உள்ளன
 • ஏமன் நாட்டில் நடந்த வான்வழி தாக்குதலில் பொதுமக்கள் உள்பட 149 பேர் பலி
 • பாகிஸ்தான் விமானம் தரை இறங்கும்போது விபத்து
 • கலிபோர்னியாவில் காட்டுத்தீ – பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்ததற்கு வன நிர்வாகம் மீது டிரம்ப் சாடல்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *