டெனீஸ்வரனின் பதவியினை மீள வழங்குமாறு உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்

ekuruvi-aiya8-X3

denishwaran-685463வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனால் பதவி நீக்கம் செய்யப்பட்ட பா. டெனீஸ்வரனுக்கு அவர் வகித்த அமைச்சுப் பதவிகளை உடனடியாக மீள வழங்குமாறு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

வடமாகாண அமைச்சர்கள் மீதான ஊழல்குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்திய குழுவின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு, பா.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியில் இருந்து சீ.வி.விக்னேஸ்வரன் விலக்கி இருந்த நிலையில், இதற்கு எதிராக பா.டெனீஸ்வரன் உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையிலேயே உயர்நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

Share This Post

Post Comment