டெல்லியில் வெதுப்பகத்தில் வெடிவிபத்து

ekuruvi-aiya8-X3

fire_0808டெல்லியின் கிழக்கு பகுதியில் உள்ள குர்ரேஜி என்ற இடத்தில் வெதுப்பகம் ஒன்று உள்ளது. நேற்று (18) அதிகாலையில் வெதுப்பகத்தில் உள்ள சமையலறையில் வழக்கம் போல உணவு பதார்த்தங்கள் தயார் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. 20-க்கும் மேற்பட்டோர் தொழிலாளர்கள் இந்த பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது சமையலறையில் இருந்த அடுப்பு திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் பற்றி எரிந்த தீ கண் இமைக்கும் நேரத்தில் வெதுப்பகம் முழுவதும் பரவியது. இது பற்றிய தகவல் கிடைத்ததும் 4 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த வெடிவிபத்தில் சமையலறையில் இருந்த தொழிலாளர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share This Post

Post Comment