டெல்லியில் சட்டவிரோதமாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சடித்தவர் கைது

ekuruvi-aiya8-X3

Delhi-A-man-arrested--for-allegedly-printing-fake-notesடெல்லியைச் சேர்ந்த சாஸ்திரி நகரில், சட்டவிரோதமாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததாக ஒருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார். இம்ரான் கான் என்ற அந்த நபர் தமது வீட்டில் கள்ள நோட்டுகளை அச்சடித்துள்ளார்.

தகவலின் பேரில் டெல்லி கிரைம் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இம்ரான் கானிடம் இருந்து ரூ.1.78 லட்சத்துக்கு இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பிரிட்டர்கள் மற்றும் கம்யூட்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், காஸியாபாத் நகரின் இந்திராபுரம் பகுதியை சேர்ந்த மைக்கேல் என்பவர் கேட்டுக் கொண்டதன் பேரில் போலி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்ததாக இம்ரான் கான் தெரிவித்தார்.

நோட்டுகளை பெறுவதற்கு நேற்று மைக்கேல் வருவதாக இருந்ததாகவும், ஆனால் எப்படியே வரவில்லை என்றும் கூறினார்.

Share This Post

Post Comment