டெல்லியில் எதிர்க்கட்சிகள் இன்று தர்ணா போராட்டம்

parliment_Indiaரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இன்று (புதன் கிழமை) தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

அதிக மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை செல்லாது என்ற பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு எதிராக 10-க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு போராடி வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் பாராளுமன்ற இரு அவைகளிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், இன்று (புதன்கிழமை) எதிர்க்கட்சிகள் டெல்லியில் நடத்தவிருக்கும் தர்ணா போராட்டம் குறித்த உத்திகளை வகுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

கூட்டத்துக்கு பின்பு, காங்கிரஸ் தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நிருபர்களிடம் கூறும்போது, “நாளை (இன்று) காலை 9.45 மணி அளவில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒன்று கூடி தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ரூபாய் நோட்டு செல்லாது என்ற பிரச்சினையில் நாங்கள் படிப்படியாக செல்வோம்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “ஜனாதிபதியை சந்திப்பது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எனினும் அவரை சந்திப்பதற்கான தேதி பற்றி இன்னும் தீர்மானிக்கப்படவில்லை” என்றார்.

டெல்லிக்கு புறப்படும் முன்பாக மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று நிருபர்களிடம் பேசும்போது, “டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நாளை(இன்று) பகல் 12.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறேன். இதில் அனைத்து எதிர்க்கட்சிகளும் பங்கேற்று ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் சாமானிய மக்கள் படும் கஷ்டங்களை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும்” என்றார்.

“பாராளுமன்ற மற்றும் சட்ட சபை இடைத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மிக அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருப்பது மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிரான மக்கள் புரட்சி ஆகும். இதிலிருந்து பா.ஜனதா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.


Related News

 • முஸ்லிம் ஜமாத்தில் இருந்து நீக்கப்பட்டார் ரஹானா
 • ஜெயலலிதாவின் இறுதி சடங்கிற்கு அரசு செலவு எவ்வளவு?
 • திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 2வது நாளாக ஆய்வு
 • இந்திய துணை கண்டத்தில் அதிக திட்டங்களை கொண்டு வந்தது ஜெயலலிதா அரசு
 • தீபாவளி சிறப்பு பஸ்களில் கூடுதல் கட்டணம் இல்லை
 • மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு லாயக்கில்லை – எடப்பாடி பழனிசாமி
 • எங்களின் பலம் தெரியப்படுத்த வரும் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் -சரத்குமார்
 • கட்சியின் கொடி, பெயர் அறிவிக்கப்பட தாமதமாகும் -ரஜினி
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *