மருத்துவமனையில் இறந்துவிட்டது என பிளாஸ்டிக் பையில் கொடுக்கப்பட்ட குழந்தை உயிருடன் இருந்தது கண்டுபிடிப்பு

ekuruvi-aiya8-X3

plastic_bag_childடெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு நேற்று  இருகுழந்தைகள் பிறந்து உள்ளது. பெண் 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோதே மருத்துவமனையில் குழந்தைகள் பிறந்தது. பெண் மற்றும் ஆண் குழந்தையும் உயிரிழந்துவிட்டது என மருத்துவமனை நிர்வாகம் பெற்றோரிடம் பிளாஸ்டிக் பையில் வைத்து ஒப்படைத்து உள்ளது. பெற்றோர்கள் குழந்தைகளுக்கு இறுதி சடங்கு செய்வதற்கு கொண்டு சென்ற போது ஒரு குழந்தையின் உடல் அசைந்து உள்ளது. குழந்தைகளின் தந்தை பார்த்த போது ஆண் குழந்தைக்கு உயிர் இருந்ததும், குழந்தை மூச்சு விடுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அவர்கள் ஆண் குழந்தையை உடனடியாக அங்கிருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுத்து உள்ளதாக குழந்தையின் பெற்றோர் தெரிவித்து உள்ளனர். போலீசாரும் விசாரித்து வருகிறார்கள். மருத்துவமனை தரப்பில் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், மருத்துவமனையில் நவம்பர் மாதம் 30-ம் தேதி இரட்டை குழந்தை பிறந்தது, பெண் குழந்தை இறந்தே பிறந்தது. 22 வாரத்தில் பிறந்த ஆண் குழந்தையை உயிர்காப்பு சிறப்பு பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிப்பதற்கு பதிலாக துரதிஷ்டவசமாக பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
 எங்களுடைய கவனத்திற்கு வந்து உள்ளது. இந்த அரிதான நிகழ்வு எங்களுக்கு மிகவும் அதிர்ச்சி மற்றும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பான விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது, குறிப்பிட்ட மருத்துவர் உடனடியாக வேலையைவிட்டு நீக்கப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெற்றோர்களிடம் தொடர்பில் உள்ளோம், அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து கொடுப்போம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஜேபி நட்டா பேசுகையில், துரதிஷ்டவசமான சம்பவம் ஆகும், இவ்விவகாரம் தொடர்பாக விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் டெல்லி அரசிடம் கேட்டுக்கொண்டு உள்ளோம் என கூறிஉள்ளார்.

Share This Post

Post Comment