இந்தோனேஷியாவில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்வு

Facebook Cover V02
Indonesia-quakeஇந்தோனேசியாவில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களாக விளங்கும் பாலி மற்றும் லம்போக் தீவுகளை 5-ம் தேதி மாலை பயங்கர நிலநடுக்கம் தாக்கியது.
ரிக்டர் அளவுகோலில் 7 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கம் பாலி, லம்போக் மட்டுமின்றி சுற்றி உள்ள நகரங்களையும் கடுமையாக உலுக்கியது. ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு திரும்பப்பெறப்பட்டது. இந்த நிலையில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிர் இழந்த பலரின் உடலை மீட்பு குழுவினர் மீட்கத் தொடங்கினர்.  இதனால் பலி எண்ணிக்கை 131 ஆக உயர்ந்துள்ளது. 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Share This Post

Post Comment