ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது – பிரதமர் அலுவலகம்

Facebook Cover V02
modi212014 பாராளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடி, வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக கூறினார். அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை என எதிர்க்கட்சிகள் தரப்பில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக சமூக வலைதளங்களிலும் விமர்சனங்களும் முன் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தகவல் உரிமை சட்டத்தின்கீழ், பிரதமர் மோடியின் வாக்குறுதிபடி எப்போது ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என கேள்வி எழுப்பட்டது.
மத்திய தகவல் கமிஷனுக்கு இதுதொடர்பாக பதில் அளித்து உள்ள பிரதமர் அலுவலகம், இவ்விவகாரம் ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வரவில்லை, இதுதொடர்பாக பதிலளிக்க முடியாது, என தெரிவித்து உள்ளது.
 மோகன் குமார் சர்மா என்பவர் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி இதுதொடர்பான ஆர்.டி.ஐ. மனுனை சமர்பித்தார். 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்த பின்னர் 18 நாட்கள் கழித்து, எப்போது ரூ. 15 லட்சம் பொதுமக்கள் கணக்கில் செலுத்தப்படும் என்பது உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். இவ்விவகாரம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய ரிசர்வ் வங்கி எந்தஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை என தலைமை தகவல் ஆணையர் ஆர்.கே. மாத்தூர் கூறிஉள்ளார்.
விண்ணப்பத்தாரரின் கேள்விகள் ஒன்று மற்றும் நான்கு (பிரதமர் மோடியின் வாக்குறுதிபடி எப்போது ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்பது தொடர்பான கேள்வி மற்றும் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்னதாகவே பத்திரிக்கைக்கு தகவல் வெளியானது தொடர்பான கேள்வி) ஆர்டிஐ சட்டத்தின் கீழ் வராது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துவிட்டது. ஆர்டிஐ சட்டப் பிரிவு 2(எப்)-ன்படி தகவல் வரையறைக்குள் கேள்விகள் அடங்காது என தெரிவிக்கப்பட்டது என மாத்தூர் கூறிஉள்ளார்.

Share This Post

Post Comment