டைனசோர் இனத்தை அழித்த விண்கல்

Thermo-Care-Heating

dainosarஅறுபத்தி ஆறு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால், பூமியில் மோதி, டைனசோர்களை அழித்துவிட்ட விண்கல் பற்றிய தடயங்களை தாங்கள் கண்டறிய உதவும் துப்புக்களை வைத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இப்போது மெக்ஸிகோ வளைகுடாவாக இருக்கிற இடத்திலுள்ள ராட்சத பாறையால் ஏற்பட்ட பள்ளத்தை சர்வதேச குழு ஒன்று துளையிட்டு ஆய்வு நடத்தியுள்ளது.

பூமியை தாக்கிய விண்கல்லில் இருந்து வந்திருக்க்க்கூடும் என்று இந்த ஆய்வு குழுவினர் நம்புகின்ற அதிக அளவிலான நிக்கல் வழமைக்கு அதிகமாக அங்கு இருப்பதை அவர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.

அந்த பொருளே (அந்த விண்கல்லே) பாதிப்பால் ஆவியாகி போனது. ஆனால், அதில் கொஞ்சம் வானத்தில் உறைந்து, பின்னர் மழையாக, பள்ளத்தின் முகப்பிற்கு திரும்ப வந்திருக்கலாம்.

வாழ்க்கை மீது இத்தகைய பேரழிவு மிக்க பாதிப்பை இந்த விண்கல் ஏற்படுத்தியது ஏன் என்பதை அறிவதற்கான துப்புகளை விஞ்ஞானிகள் தேடி வருகின்றனர்.

ideal-image

Share This Post

Post Comment