முதன் முறையாக “டாடா” சாம்ராஜியத்தின் தலைவராக தமிழர்..!

ekuruvi-aiya8-X3

santhirasekaranஉலகின் முதன்மை தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமத்தின் தலைவராக தமிழ் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். என்.சந்திரசேகரன் என்பவரே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.

100 ஆண்டுகள் வரலாற்றைக்கொண்ட சுமார் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள டாடா குழுமத்தின் தலைவராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதல் கூகுள் தேடு பொறியில் அதிகம் தேடப்பட்ட நபராக என்.சந்திரசேகரன் இடம்பிடித்துள்ளார்.

1963ஆம் ஆண்டு பிறந்த இவர், திருச்சியில் உள்ள மண்டல பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். இந்நிலையில். 1987ஆம் ஆண்டு டாடா கன்சல்டன்சி சர்வீஸில் இணைந்துகொண்டார்.

தனது அபார திறமையினால் படிப்படியாக பதிவியுயர்வு பெற்ற அவர், 2009ஆம் ஆண்டு டி.சி.எஸ் இன் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

கடந்த ஆண்டு ஒக்டோம்பர் மாதம் டாடா குழுமத்தின் கூடுதல் இயக்குனராக பொறுப்பேற்றுக்கொண்ட அவர், நேற்றைய தினம், டாடா குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, all – asia executive ranking அமைப்பினால் தொடர்ந்து ஐந்து முறை சிறந்த தலைமை அதிகாரியாக என்.சந்திரசேகரன் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment