ஒல்லாந்த கோட்டையில் இராணுவத்தினர் முகாமிடுவதனை ஏற்றுக்கொள்ளமாட்டேன்

vigneswaran-1-450x300யாழ்ப்பாணம் ஒல்லாந்த கோட்டையில் இராணுவத்தினர் முகாமிடுவதனை ஏற்றுக்கொள்ளமாட்டேன். இராணுவத்தினர் வடமாகாணத்தில் இருந்து வெளியேறுவார்கள் எனின், தற்காலிகமாக இராணுவத்தினரை ஒல்லாந்த கோட்டையில் வைத்திருக்கலாமே தவிர, நிரந்தரமாக இராணுவத்தினர் முகாமிட ஒரு போதும் அனுமதிக்க முடியாது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஒல்லாந்த கோட்டையில் இராணுவத்தினர் முகாமிட அனுமதிக்க கூடாது என பொது மக்கள் பல போராட்டங்கள் முன்னெடுத்த வரும் நிலையில், ஒல்லாந்த கோட்டையை இராணுவத்தினருக்கு வழங்குவது தொடர்பில் முதலமைச்சரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ். ஒல்லாந்தர் கோட்டையை இராணுவத்திற்கு கொடுப்பததென்ற விடயம் சட்டமாக வரவில்லை. ஆனால், பலராலும் பேசப்படுகின்றது. இதனை ஆரம்பித்து வைத்தவர் வடமாகாண ஆளுநர் தான் இந்த விடயத்தினை ஆரம்பித்து வைத்தவர். அவ்வாறு இராணுவத்திற்கு ஒல்லாந்த கோட்டையைக் கொடுக்க வேண்டுமாயின் யாழ். மாநகர சபையிடம் அனுமதி கோர வேண்டும்.

வடமாகாணத்தில் இருந்து இராணுவம் வெளியேறுவார்கள் எனின், தற்காலிகமாக இராணுவத்தினரை ஒல்லாந்த கோட்டையில் வைத்திருக்கலாமே தவிர, நிரந்தரமாக இராணுவத்தினர் முகாமிட அனுமதிக்க முடியாது.

ஒல்லாந்த கோட்டை தொல்பொருள் சின்னம் என்பதனால், அங்கு படையினரை முகாமிட அனுமதித்தால், பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடும் என்ற பிரச்சினையும் உள்ளது.

வடமாகாண சபை சுற்றுலா மையம் ஒன்றிணை அமைக்க கோரிய போது, தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களம் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். ஆனால், படையினர் வரும்போது, ஏன் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை என்பதும் புரியவில்லை.

சுற்றுலா மையம் அமைக்க கேட்ட போது அனுமதிக்காத தொல்பொருள் திணைக்களம், இராணுவத்தினருக்கு ஒல்லாந்த கோட்டையை கொடுப்பது மனவருத்தத்தினை தருகின்றது.

அதேநேரம், இராணுவத்தினர் ஒல்லாந்த கோட்டையில் நிரந்தர முகாமிடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.






Related News

  • பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவிப்பு
  • டில்ஷான் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்தார்
  • புதிய பிரதமருக்கு எதிராக 122 உறுப்பினர்கள் ஒப்பமிட்ட பிரேரணை கையளிப்பு
  • பாராளுமன்றம் நாளை காலை வரை ஒத்தி வைப்பு
  • ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்கால தடை உத்தரவு
  • கட்சி வழங்கும் எந்த பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள தயார்
  • பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு ஆதரவான மனுக்களும் விசாரணைக்கு
  • அனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன் – ரணில்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *