கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளன விருது விழா

ekuruvi-aiya8-X3

0D1A2976(1)கனேடியத் தமிழர் வர்த்தக  சம்மேளனத்தின் 20வது ஆண்டு விருது விழா ஏப்ரல் மாதம் 21ம் திகதி மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றிருந்தது.
மார்க்கம் நகரில் உள்ள Hilton Hotel மண்டபத்தில் நடைபெற்ற இந்த விருது விழாவில் ஒன்ராறியோ மாகாண முதல்வர் கத்தலின் வின் அம்மையார் மகாண அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினரும் வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான ஹரி ஆனந்தசங்கரி, ரொரன்ரோ நகர பிதா ஜோன் ரோரி, மார்க்கம் நகரபிதா பிராங் ஸ்காபட்டி, ரிச்சமண்ட ஹில் நகரபிதா டேவிட் பரோ ரொரன்ரோ நகர சபை உறுப்பினர் நீதன் ஹான், மார்க்கம் நகர சபை உறுப்பினர் லோகன் கணபதி உட்டபட பெருமளவிலான பிரபலங்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்த விருது விழாவில் வர்த்தகத் துறையில் சாதனை படைத்து வரும் தமிழ் வர்த்தகப் பிரமுகர்கள் விருது வழங்கி  கௌரவிக்கப்பட்டனர்.
CTCC-award_2018கடந்த மூன்று தசாப்தங்களாக தாயக மக்களுக்கு சிறப்பான சமூக சேவைகளை ஆற்றி வரும் திரு.யோகநாதன் கார்திகேசு சிறந்த சமூகசேவைக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். கனடாவில் இயங்கி வரும் வன்னிச் சங்கத்தின் முன்னாள் தலைவரான திரு. யோகநாதன் தாயகத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் மாணவர்களின் கல்விச் செயல்பாடுகளை முன்னெடுப்பதற்கான தன்னலமற்ற செயல்பாடுகளில் கடந்த பல வருடங்களாக ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கனடாவில் வாழும் மக்களின் உதவிகள் நேரடியாக தாயக மக்களை சென்றடைவதற்கான பொறிமுறைகளை உருவாக்கி அதன் மூலமாக அந்த மக்களினதும் மாணவர்களினதும் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் பணியில் இவர் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதனை கெரவிக்கும் வகையில் இந்த விருதினை கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் தலைவியான டிலானி குணராஜா அவர்கள்  யோகநாதன் கார்திகேசு அவர்களுக்கு வழங்கினார்.

ctcc-award-2018-1சிறந்த சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கான விருது Inforce Life நிறுவனத்தின் அதிபர் திரு.சந்திரன் இராசலிங்கம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. காப்புறுதிச் சேவைகள் மற்றும் முதலீட்டு துறையில் சிறப்பான சேவைகளை வழங்கி வரும் Inforce Life நிறுவனம் சந்தைப்படுத்தலில் தன்கென தனியான முத்திரiயினை பதித்து வரும் ஒரு நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்து. நவீன ஊடகப் போக்குகளை புரிந்து அதற்கு ஏற்ற வகையிலான மாற்றங்களோடு இந்த நிறுவனம் தனது சேவைகளை சந்தைப்படுத்தி வருகின்றது. மிகக் குறுகிய காலத்தில் பெருவளர்ச்சியினை இந்த நிறுவனம் எட்டிப்பிடித்திருப்பதற்கு அதன் சந்தைப்படுத்தல் பொறிமுறை மிக முக்கியமான காரணியாக கருதப்படுகின்றது. இதன் அiடிப்படையில் Inforce Life நிறுவனத்தின் அதிபர் திரு.சந்திரன் இராசலிங்கம் அவர்களுக்கு சிறந்த சந்தைப்படுத்தலுக்கான விருதினை Dimond Sponsor ஆக இணைந்திருந்த CIBC வங்கியின் சிரேஸ்ட பணிப்பாளரான திரு.மணி சித்தூர் மற்றும் வின்சன் சின்னத்துரை அவர்கள் வழங்கினார்.

ctcc-award-galaஇளம் தொழில் முனைவோருக்கான விருதினை Client Flo நிறுவனத்தின் அதிபர் ஜேய் வசந்தராஜா பெற்றுக் கொண்டார். வர்த்தக நிறுவனங்களுக்கான சந்தைப்படுத்தல் சேவைகளை வழங்கி வரும் இவருடைய நிறுவனம் நூற்றுக்கண்கான பெரு நிறுவனங்களை தனது வாடிக்கையாளர்களாக கொண்டியங்கி வருகின்றது. புதிய உத்திகள் மூலம் நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களை கண்டடைவதற்கும் அவர்களின் பொருட்களையும் சேவைகளையும் சந்தைப்படுத்துவதற்குமான தீர்வுகளை Client Flo வழங்கி வருகின்றது. 2014ம் ஆண்டு அடுக்கமாடிக் குடியிருப்பில் உள்ள அறையில் ஜேய் வசந்தராஜா ஆரம்பித்த இந்த நிறுவனம் இன்று ரொரன்ரோவில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் பல திறமையாளர்களுடன் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இளம் வயதில் தொழில் முனைவில் ஈடுபட்டு வெற்றிகரமான நிறுவனம் ஒன்றை ஏற்படுத்திய திரு.ஜேய் வசந்தராஜா அவர்களுக்கு இளம் தொழில் முனைவோருக்கான விருதினை Dimond Sponsor ஆக இணைந்திருந்த Kanish and Partners நிறுவனத்தின் திரு. ஜூலியன் இம்மானுவேல்; அவர்கள் வழங்கினார்.

ctcc-award-gala-erஇந்த விருது விழாவில் சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விருது Sharleez Bridal     நிறுவனத்தின் அதிபரான ஷர்மிலி தங்கராஜாவிற்கு வழங்கப்பட்டது. ஆடை வடிவமைப்பில் தனக்கிருந்த ஆர்வம் காரணமாக ஷர்மிலி ஆரம்பித்த Sharleez Bridal     நிறுவனம். மணப் பெண்களுக்கான தனித்துவமான ஆடைகளை வடிவமைத்து வழங்கி வருகின்றது. உயர்தரமும் தனித்துவமும் கொண்ட ஆடை வடிவமைப்பினால் பல வாடிக்கையாளர்களை கொண்டியங்கும் நிறுவனமாக Sharleez Bridal     நிறுவனத்தை உருவாக்கிய ஷர்மிலி தங்கராஜாவிற்கு சிறந்த பெண் தொழில் முனைவோருக்கான விரதினை Dimond Sponsor ஆக இணைந்திருந்த RBC வங்கியின் சிரேஸ்ட அதிகாரியான  ரோஷன் முகர்ஜி அவர்கள் வழங்கினார்.

chanberகனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் விருது விழாவில் முக்கிய விருதாக கருதப்படும் சிறந்த தொழில் முனைவிற்கான விருதினை மொன்றியலில் இயங்கி வரும் Luxme International LTD நிறுவனத்தின் அதிபர் . திரு. நவம் ஜெகன் அவர்கள் பெற்றுக் கொண்டார். பெரும் தொழில் நிறுவனங்களுக்கான இயந்திரங்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனமாக  Luxme International LTD   இயங்கி வருகின்றது. 35 வருடங்களாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தை திரு. நவம் ஜெகன் அவர்கள் தனி மனித முயற்சியால் உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கனடாவில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் உள்ள உற்பத்தி நிறுவனங்களுக்கும் தேவையான இயந்திங்களை Luxme International LTD   உருவாக்கி வருகின்றது. இயந்திரங்களை உருவாக்குவது மட்டுமன்றி அவற்றை உள்ளடக்கும் வகையிலான தொழில்சாலை நிர்மாணப்பணிகளையும் இந்த நிறுவனம் மெற்கொண்டு வருகின்றது. சிறந்த தொழில் முனைவிற்கான விருதினை Platinum Sponsors ஆக இணைந்திருந்த Tekno Media நிறுவனத்தின் அதிபர் திரு.மதன் சண்முகராஜா அவர்கள்  Luxme International LTD     அதிபர் திரு.நவம் ஜெகன் அவர்களுக்கு வழங்கினார்.

கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் இந்த விருது விழாவின் சிறப்புப் பேச்சாளராக திருமதி சூசன் உதயகுமார் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். Schneider Electric நிறுவனத்தின் கனடாவிற்கான நிறைவேற்று அதிகாரியாக பணியாற்றி வரும்  திருமதி சூசன ;இலங்கையில் இருந்த மூன்று வயதில் கனடாவிற்கு புலம்பெயர்ந்தவர்.இங்கு பல்வேறு பட்ட மேற்படிப்புகளை நிறைவு செய்துள்ள இவர் மிகப் பிரபலமான பல்தேசிய நிறுவனம் ஒன்றின் கனடாவிற்கான நிறைவேற்று அதிகாரியாக இயங்கி வருகின்றார்.வாழ்கையில் வெற்றி பெறுவதற்கு அவசியான விதிகள் பற்றியும் தனது வளர்ச்சி பற்றியும் மிகச் சிறப்பான ஊக்க உரையினை அவர் வழங்கியிருந்தார்.

இந்த நிகழ்வில் சிறப்புரையாற்றி ஒன்ராறியோ வர்த்தக சம்மேளத்தின் தலைவரான திரு. ரோசோ ரோய் அவர்கள் கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளனம் கனடாவில் உள்ள ஏனைய வர்த்தக சம்மேளனங்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.
கனடாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்ராற ரொரன்ரோ நகரம் யாழ்ப்பாண நகரத்துடன் செய்து கொண்ட நட்புறவு ஒப்பந்ததில் பங்காளர்களாக கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளத்தை இணைத்துக் கொண்டுள்ளமை குறித்த அறிவித்தலை ரொரன்ரோ நகர பிதா ஜோன் ரொரி அவர்கள் இந்த விருது விழாவில் அறிவித்திருந்தார்.

இலங்கையின் வடக்கு கிழக்கில் உள்ள வர்த்தக முயற்சியாளர்களும் கனடாவில் உள்ள தமிழ் வர்த்த முயற்சியாளர்களும் தமக்கிடையிலான வர்த்த முயற்சிகளில் ஈடுபடுவதற்கான ஏது நிலைகளை கண்டறிவதற்கும் அதனை ஊக்கப்படுத்துவதற்கும் கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் ரொரன்ரோ நகரசபைக்கு ஒத்துழைப்பை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில் உரையாற்றிய ரொரன்ரொ நகர சபை உறுப்பினர்  நீதன் சான் அவர்கள் ரொரன்ரோவில் உள்ள சிறுவர்த்தக முயற்சியாளர்களுக்கு நகர சபை மூலமாக கிடைக்கக் கூடிய வரப்பிரசாதங்கள் மற்றும் அனுகூலங்கள் குறித்த அறிவூட்டல் செயலமர்வுகளை கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் அனுசரணையில் முன்னெடுக்கவுள்ளதாக கூறினார்.
27 ஆண்டுகளாக இயங்கி வரும் கனேடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் முதல் தடவையாக பெண் ஒருவரை தலைவராக தெரிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

திருமதி. டீலானி குணராஜா தலைமையிலான கனேடியத் தமிழர் வர்த்தக சம்மேளத்தின் நிர்வாகக் குழுவினர் இந்த நிகழ்வை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளமை பாரட்டிற்குரியது.

மேலதிக நிகழ்வின் புகைப்படங்களை பார்வையிட இதில் அழுத்தவும்

https://images.biztha.com/Latest-Events-2018/CTCC-2018-Awards-Gala-Apr-212018/

https://images.biztha.com/Latest-Events-2018/CTCC-20th-Annual-Award-Gala-April-21-2018-Photos-by/

https://images.biztha.com/Latest-Events-2018/CTCC/

 

ekuruvi aiya12-L ekuruvi aiya26-L ekuruvi aiya190-L ekuruvi aiya205-L ekuruvi aiya245-L ekuruvi aiya300-L ekuruvi aiya369-L ekuruvi aiya380-L

 

 

 

Share This Post

Post Comment