கனடியத் தமிழர் பேரவையால் ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படும் கனடியத் தமிழர் நிதி சேர் நடையின் தொடக்க நிகழ்வு
May 28 2012 05:52:32

 கனடியத் தமிழர் பேரவையால் முன்னெடுக்கப்படும் மிகப்பெரும் செயற் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். ஆண்டுதோறும் இலாபநோக்கமற்ற கனடிய அமைப்பொன்று தேர்ந்தெடுக்கப்பட்டு இந் நிதி வழங்கப்பட்டு வருகிறது. நோயுற்ற சிறார் அமைப்பு, கனடியப் புற்றுநோய்க் குழுமம் மற்றும் கடந்த ஆண்டில் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகிய அமைப்புக்கள் இந் நிதி சேர் நடை மூலம் பயன் அடைந்தன. சர்வதேச மன்னிப்புச் சபைக்கு 50 000 கனடிய டொலர்கள் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

 
இவ்வாண்டு மனநலம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதல் நடுவத்துடன் (காம்எச்-CAMH) கனடியத் தமிழர் பேரவை பெருமையுடன் கை கோர்க்கிறது. காம்எச் அமைப்பானது கனடாவின் மிகப்பெரிய மனநலம் கற்பிக்கும் சிகிச்சை நிலையமாகும். காம்எச் அமைப்பானது ரொறன்ரோ பல்கலைக்கழகம் உட்பட பல அமைப்புகளோடு இணைந்து செயற்படுகிறது. சிகிச்சை அளித்தல், ஆராய்ச்சி, கற்பித்தல், கொள்கை உருவாக்கல் மற்றும் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு பெற உதவுதல் போன்ற பணிகள் காம்எச் அமைப்பால் மேற்கொள்ளப்படுகின்றன. 
 
நிதிசேர் நடை தொடக்க நிகழ்வில் பல குமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இசுகாபரோ ஏயின் கோட் எம் பி பி திருமதி சூ வொங், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் மதிப்புக்குரிய பிராட் டூகிட் மற்றும் காம்எச் அமைப்பின் உள்ளூர் நலம்பேணற் திட்ட இயக்குனர் திரு அக்வாற்று கென்றி ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றுக் கனடியத் தமிழர் பேரவையின் இவ் அரிய முன்னெடுப்பையும் கனடியத் தமிழரின் உயரிய பங்களிப்பையும் பாராட்டி வாழ்த்தினர். 
 
இவ்வாண்டின் நிதிசேர் நடையானது செப்டெம்பர் மாதம் 16ஆம் நாள் ஞாயிறு காலை 9:00 மணிக்கு இசுகாபரோவில் அமைந்துள்ள தொம்சன் பூங்காவில் இடம்பெறும். ஆண்டுதோறும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்கும் நிகழ்வாக இது அமைகிறது. இதுபோன்ற தமிழர் குமுக நிகழ்வுகளில் இந்நிகழ்வே மிகப்பெரிய நிகழ்வாகும். இந் நிகழ்வின் பக்க நிகழ்வுகளாக மனநலம் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாதல் தொடர்பாக காம்எச் உடன் இணைந்து கனடியத் தமிழர் பேரவை பல கருத்தரங்குகளையும் கலந்துரையாடல்களையும் தமிழ்க் குமுகத்துக்காய் நடத்தவுள்ளது. 
 
கனடியத் தமிழ்க் குமுகத்தின் பலத்த ஆதரவுடன் மற்றுமொரு வெற்றிகரமான நிதி சேர் நடை நிகழ்வை நடாத்தி முடிக்கக் கனடியத் தமிழர் பேரவை தயாராகியுள்ளது.
 
ctc walk
 
ealk a thone
 
May 23 2013 02:22:49 [Canada]
ரொறொன்ரோவின் நிலத்தடி வாகன நிறுத்துமிடம் ஒன்றில் 22 வயதாகும் இளம்பெண் ஒருவர் மூவர் அடங்கிய கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

Read More >

May 23 2013 02:00:14 [Canada]
சோமாலியா கடத்தல் பேர்வழிகளுடன் இணைந்து மாநகர முதல்வர் கொக்கைன் பிடிப்பது போன்ற காணொளிகள் வெளியான சில நாட்களுக்குப் பின்னர், இந்த விடயத்தில் பதில் சொல்ல றொப் போர்ட் நேரடியாக

Read More >

May 23 2013 01:09:16 [Canada]
ரொறொண்ரோவின் ஸ்கார்பரோ பகுதியில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாழுகின்றோம். எமதுமக்களின் உடல் ஆரோக்கியத்திலும், பாதுகாப்பிலும் பாரிய பங்கினை வகிப்பது பேர்ஸ்மவுண்ட்மருத்துவமனை,

Read More >

May 23 2013 00:58:11 [Canada]
மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் வித்தைகள் இந்தியா போன்ற நாடுகளில் மட்டுமல்ல , அமெரிக்காவிலும் நன்றாகவே நடந்து வருகிறதென்பது தெரிய வந்துள்ளது. தொழில் நுட்பத்தின் வளர்ச்சி விண்ணைத் தொட்டு விட்ட இந்தக் காலத்தில்

Read More >

May 23 2013 09:14:44 [Canada]
உலகின் மிக முக்கியமான போட்டித் திரைப்பட விழாக்களுளொன்றான ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாவில் (Shanghai International Film Festival) விருதுக்காக போட்டியிடும் படங்களில் ஒன்றாக தெரிவாகியுள்ளது

Read More >

May 22 2013 08:22:32 [Canada]
மல்லிகை என்றாலே அதன் மணம் தான் அனைவருக்கும் ஞாபகத்திற்கு வரும். அதிலும் குறிப்பாக மதுரை மல்லிக்கு அதிக மணம் இருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் மல்லிகைப் பூவில் இருப்பது வெறும் மணம் மட்டுமல்ல. பல்வேறு

Read More >

May 22 2013 08:16:13 [Canada]
செனட்டர் மைக் டபி பதவி விலகிய பின்னரும் கூட அவர் தொடர்பான விவகாரங்களிலும், ஆளும் கோன்செர்வேற்றிவ் அரசின் ஊழல்களையும் எதிர்கட்சிகள் பிரதானப்படுத்தத் தொடங்கியுள்ளன.

Read More >

May 22 2013 08:09:06 [Canada]
அமெரிக்காவில் மாணவர்களுக்கான இன்டெல் அறிவியல் போட்டிகள் சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருது வழங்கும் விழா, வாஷிங்டனில் உள்ள போனிக்ஸ் திரையரங்கில்

Read More >

May 22 2013 07:59:25 [Canada]
கடந்த வாரம் முழுவதும் நடந்து முடிந்திருக்கும் நம்மவர் நினைவு நிகழ்வுகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், யார் எந்த அமைப்பினை சார்ந்தவர்கள் என்ற பிரிவினையையும்

Read More >

May 22 2013 07:44:05 [Canada]
பொது நிகழ்ச்சிகளை நடத்தும் நம் அமைப்புக்கள் பிறரை அவமானப்படுத்த வேண்டும் , பழி வாங்க வேண்டும் உள்ளிட்ட பல சிந்தனைகளுடன் சமீப காலமாக செயல்பட்டு வருவது ஒரு மோசமான செயலாகவே தெரிகிறது.

Read More >