கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனத்தின் 14 ஆம் ஆண்டு தொழில் முனைவோர் விருதுக்கான மனுத் தாக்கல் ஆரம்பம்
Feb 29 2012 09:15:38

 கனடாவில் வாழும் தமிழ் மக்களின் வணிக ரீதியான சாதனைகளை அங்கீகரித்து அனைவருக்கும் உணர்த்துவதற்காக ஆண்டுதோறும் தொழில் ரீதியான பல தரப்பட்ட விருதுகளை வழங்கி கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனம் தொழில் முனைவோரை கௌரவப்படுத்தி வருகிறது. இந்த வருடத்திற்கான 14 வது தொழில் முனைவோர் விருது குறித்த அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. கனடிய தொழில் முனைவோரிடமிருந்து இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்களும், விதிமுறைகளும் கனடிய தமிழ் வர்த்தக அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

 
இந்த ஆண்டில் சிறந்த தொழில் முனைவோர் விருது, பெண்களுக்கான சிறந்த தொழில் முனைவோர் விருது, சிறந்த இளையோர் தொழில் முனைவோர் விருது, சிறந்த விளம்பர பிரச்சார விருது, தலைசிறந்த தொழில் நெறிஞர் விருது, தலைசிறந்த சமூக சேவையாளர் விருது ஆகியவை வழங்கப்பட உள்ளதாக கனடிய தமிழ் வர்த்தக சம்மேளனம் அறிவித்துள்ளது. இதற்கான தகுதிகளும் வெளியாகியுள்ளன.
 
சிறந்த தொழில் முனைவோர் விருதுக்கான தகுதிகள்
 
· குறைந்த பட்சம் 4 வருடங்கள் தொழில் துறையில் இருந்திருக்க வேண்டும்.
· நிறுவனத்தில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை கணக்கில் எடுக்கப்படும் .
· தொழிலில் ஏற்றத் தாழ்வு நிலைகள் இருந்த போதிலும் கூட ஒட்டுமொத்தமாக நிலைப்புத்தன்மையுடன் தொழில் வளர்ச்சி கண்டிருக்க வேண்டும்.
· விண்ணப்பதாரர் அதே தன்மையுடைய பிற தொழில்நிறுவனங்களைக் காட்டிலும் .முதலிடத்தில் இருக்க வேண்டும்.
· தொழில் முனைவோர் சமூகத்தின் நன்மதிப்பை பெற்றவராய் இருத்தல் அவசியம்.
· நிறுவனப் பணியாளர்கள் தரமான வாழ்க்கையையும்  , சிறந்த பணியாற்றும் சூழலையும் பெற்றிருக்க வேண்டும்.
· நிறுவனப் பணியாளர் மற்றும் உரிமையாளரின் பொது நலச் சேவையும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும்.
· விண்ணப்பதாரர் கனடிய தமிழ் வர்த்தக சம்மேளத்தின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 
· தொழில் வியாபார யுக்திகளைப் பயன்படுத்துவதில் புதுமைக்கான சான்றுகள் கணக்கில் எடுக்கப்படும்.
· சமூகப் பார்வை அவசியம்.
 
சிறந்த பெண் தொழில் முனைவோர் விருது
 
· குறைந்த பட்சம் 4 வருடங்கள் தொழில் துறையில் இருந்திருக்க வேண்டும்.
· தொழிலில் ஏற்றத் தாழ்வு நிலைகள் இருந்த போதிலும் கூட ஒட்டுமொத்தமாக நிலைப்புத்தன்மையுடன் தொழில் வளர்ச்சி கண்டிருக்க வேண்டும்.
· விண்ணப்பதாரர் அதே தன்மையுடைய பிற தொழில்நிறுவனங்களைக் காட்டிலும் .முதலிடத்தில் இருக்க வேண்டும்.
· தொழில் முனைவோர் சமூகத்தின் நன்மதிப்பை பெற்றவராய் இருத்தல் அவசியம்.
· நிறுவனப் பணியாளர்கள் தரமான வாழ்க்கையையும்  , சிறந்த பணியாற்றும் சூழலையும் பெற்றிருக்க வேண்டும்.
· நிறுவனப் பணியாளர் மற்றும் உரிமையாளரின் பொது நலச் சேவையும் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படும்.
· விண்ணப்பதாரர் கனடிய தமிழ் வர்த்தக சம்மேளத்தின் பிரதிநிதியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. 
· தொழில் வியாபார யுக்திகளைப் பயன்படுத்துவதில் புதுமைக்கான சான்றுகள் கணக்கில் எடுக்கப்படும்.
· சமூகப் பார்வை அவசியம்.
 
சிறந்த இளையோர் தொழில் முனைவோர் விருது
 
· குறைந்த பட்சம் 2 வருடங்களாவது தொழில் துறையில் இருந்திருக்க வேண்டும்.
· தொழில் அல்லது சேவைக்கு நல்ல சந்தை நிலவரம் இருக்க வேண்டும்.
· நிறுவனத்தில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை கணக்கில் எடுக்கப்படும் .
· தொழில் வியாபார யுக்திகளைப் பயன்படுத்துவதில் புதுமை.
· தொழில் முனைவோர் சமூகத்தின் நன்மதிப்பை பெற்றவராய் இருத்தல் அவசியம்.
· சமூகப் பார்வை அவசியம்.
· 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
 
சிறந்த விளம்பர பிரச்சார விருது
 
· குறைந்த பட்சம் 2 வருடங்களாவது தொழில் துறையில் இருந்திருக்க வேண்டும்.
· தனிப்பட்ட தொழில் அல்லது சேவை
· வாடிக்கையாளர்களைக் கவர தனித்தன்மையுடன் கூடிய முறைகளை பயன்படுத்தியிருக்க வேண்டும்.
· தொழில் வியாபார யுக்திகளைப் பயன்படுத்துவதில் புதுமையை கையாண்டிருக்க வேண்டும்.
· தொழில் விளம்பரங்களில் ஐந்தில் மூன்று இணையதளங்கள், தொலைகாட்சி, வானொலி, அச்சடிக்கப்பட்ட சீட்டுக்கள் வாயிலாக செய்யப்பட்டிருக்க வேண்டும். 
· ஐம்பதுக்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட பெரிய நிறுவனங்களுக்கு அனுமதி இல்லை.
 
தலைசிறந்த தொழில் நெறிஞர் விருது
 
· நிர்வாகிகளே விண்ணப்பதாரரை முடிவு  செய்வார்கள்.
· தனித்தன்மைக்கான சான்றுகள் காட்டப்பட வேண்டும்.
 
தலைசிறந்த சமூக சேவையாளர் விருது
 
· நிர்வாகிகளே விண்ணப்பதாரரை முடிவு  செய்வார்கள்.
· சமூகத் தலைவராக பணியாற்றி பல அமைப்புக்களுக்கு உதவி புரிந்திருக்க வேண்டும்.
 
 
 விதிமுறைகள் 
 
1 . தொழில் முனைவோர் தங்கள் தொழிலின் கனடிய செயற்பணிகளை மட்டுமே விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். 
2 . தகுதியான தொழில் முனைவோர் விண்ணப்பங்களை தேர்ந்தெடுக்கும் உரிமை கனடிய தமிழ் வர்த்தக அமைப்பினால் அமைக்கப்பட்டுள்ள தெரிவுக் குழுவினருக்கு மட்டுமே உண்டு.
3 .  விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தங்கள் தொழில் குறித்த அனைத்து ரகசியங்களும் நிச்சயமாக பாதுகாக்கப்படும்.
4 . தேவைப்படின் தொழில் குறித்த கூடுதல் தகவல்களையும் தெரிவுக்குழுவினர் கேட்கும் போது அளிக்க வேண்டும்.  
5 . விண்ணப்பங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தகவல்களும் உண்மை என்பதனை விண்ணப்பதாரரே உறுதிப்படுத்த வேண்டும்.
6 . பூர்த்தி செய்யப்பட்ட  விண்ணப்பங்களை தபால் மூலம்  கனடிய தமிழ் வர்த்தக அமைப்பின் அலுவலக முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். ஆன்லைன் மூலம் CTCC இணைய தளத்திலும் விண்ணப்பிக்கலாம்.
7.  தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்களில் “private & confidential” என குறிக்கப்பட்டிருக்க வேண்டும். தபால் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 5, 2012.  இணைய தளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்களுக்கான் கடைசி நாள் மார்ச் 9, 2012 , பிற்பகல் 5 மணி வரை மட்டுமே.
8 .  கனடிய தமிழ் வர்த்தக அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆலோசகர்கள் மற்றும் அமைப்பினால் நியமிக்கப்பட்டுள்ள தெரிவுக் குழுவினருக்கு விண்ணப்பிக்கும் தகுதி கிடையாது.
9. மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி :
CTCC அலுவலகம் : 416-335-9791 அல்லது Mike Ahilan 416-220-1184 , Santha 416 200 5470
இ -மெயில்:   info@ctcc.ca
 
 
 
 

 

 
May 21 2013 09:04:34 [Canada]
கனடா -தமிழ் எழுத்தாளர் இணையத்தின் 20வது வருட நிறைவு மலரான "சங்கப்பொழில் "2013 பற்றிய கலந்துரையாடல் நிகழ்வின் படத்தொகுப்புகள்

Read More >

May 19 2013 11:02:12 [Canada]
ரொறன்ரோவில் குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்

Read More >

May 19 2013 11:00:53 [Canada]
Mel Lastman Squareல் நடைபெற்ற தமிழ் இனவழிப்பு நாள் படத்தொகுப்புகள்

Read More >

May 19 2013 10:50:52 [Canada]
Scarboroughல் தமிழ் இனவழிப்பு நாள் கவன ஈர்ப்பு பேரணி படத்தொகுப்புகள்

Read More >

May 18 2013 11:19:55 [Canada]
முள்ளிவாய்க்கால் பெருவலியின் கூட்டுநினைவின் 4ம் ஆண்டினை உலகத் தமிழனம் நினைவேந்தியிருக்கும் இவ்வேளை, தமிழீத்தினை வென்றடைவதற்கான தமிழர் தரப்பின் நிகழ்ச்சி நிரலினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உரத்திரகுமாரன்

Read More >

May 18 2013 09:52:59 [Canada]
திருமலை மாவிலாற்றிலிருந்து வன்னியின் கிழக்கெல்லை வரை வெந்து தணிந்தது காடுகள்.

Read More >

May 18 2013 09:35:01 [Canada]
சமீப காலமாகவே தமிழர்களுடன் கை கோர்த்து செயல்படுவதையே பெரும்பான்மையான கனடிய அரசியல் கட்சிகள் விரும்புகின்றன என்பதும் கனடாவில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக தமிழினம் மாறி என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. வருடம்

Read More >

May 18 2013 21:00:17 [Canada]
2009 மே மாதம். தமிழர்களின் வாழ்வில் ஒரு சபிக்கப்பட்ட மாதமாக மாறிவிட்டது. முப்பது வருட காலமாக எமது மாவீரர்களின் உயிர் தியாகங்களாலும் போராளிகளின் குருதிகளினாலும் சிறிது சிறிதாக கட்டி

Read More >

May 17 2013 09:29:07 [Canada]
நமக்கு குளிரடித்தால் போர்த்திக் கொள்ளலாம் அல்லது ஹீட்டர்களைப் பயன்படுத்தலாம். ஆனால் ஒரு ஆப்பிள் தோட்டத்திற்கே குளிரடித்தால் என்ன செய்வது. இந்த வருடம் கனடிய விவசாயி ஒருவரின் ஆப்பிள் தோட்டத்தில் நல்ல விளைச்சல்

Read More >

May 17 2013 09:24:42 [Canada]
கவர்ச்சியில் தன்னை யாரும் மிஞ்சி விட முடியாது என்ற அளவிற்கு தத்ரூபமாக ஹிந்தி படமொன்றில் நடித்துள்ளார் கமலஹாசனின் மகள் ஸ்ருதி. அண்மையில் பத்திரிகை ஒன்றுக்கு சிறிது கவர்ச்சியாக போஸ்

Read More >