முதல் டெஸ்டில் இலங்கை வெற்றி
Mar 31 2012 06:48:25

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

இலங்கை அணி அதன் முதல் இன்னிங்கிஸில் 318 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இலங்கை அணி சார்பில் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன 180 ஓட்டங்களைப் பெற்றார். 

இதனையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து இலங்கை அணியின் பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 193 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. 

இலங்கை அணி சார்பில் ரங்கன ஹேரத் 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இலங்கை அணி 125 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. எனினும் தொடக்கம் முதலே விக்கெட்டுக்கள் சரிய தொடங்கியதால் 214 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அதிகபட்சமாக பிரசன்ன ஜெயவர்த்தன 61 ஓட்டங்களைப் பெற்றார். 

இதனையடுத்து 340 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. 

எனினும் அவ் அணியால் வெற்றி இலக்கை அடைய முடியவில்லை. இதன்படி இலங்கை அணி 75 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணி சார்பில் ஜொனதன் ட்ரொட் அதிகபட்சமாக 112 ஓட்டங்களைப் பெற்றார். 

இலங்கை அணி சார்பில் அபாரமாக பந்து வீசி 12 விக்கெட்டுக்களை வீழ்த்திய ரங்கன ஹேரத் ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

 
Sep 11 2012 08:13:30 [Tamil]
தமிழர்களின் தெய்வமாகிய நல்லூர் கந்தன் திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி 25 நாட்கள் சீரும் சிறப்பமுமாக நடந்து முடிந்தது. விழாவின் முக்கிய நாளான 24 ஆம் நாள் தேர் திருவிழாவின் போது பக்தர்கள் அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க நல்லூர்க்கந்தன் தேரில் எழுந்தருளி வலம் வந்தார்.

Read More >

Sep 10 2012 11:11:39 [Tamil]

Read More >

Sep 09 2012 09:54:52 [Tamil]
கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகளின் பின்னராக ஆட்சியமைப்பு குறித்த பேரம்பேசல்களில் ஐ.ம.சு.கூ, த.தே.கூ மற்றும் மு.கா உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுக்கொண்டிருக்கிற நிலையில்; இந்த தேர்தலில் 'பிள்ளையானின்' வகிபாகம் குறித்து சில பார்வைகள்.

Read More >

Sep 08 2012 13:39:39 [Tamil]
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காத இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று நடந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு 14 ஆசனங்களும்

Read More >

Sep 04 2012 10:36:38 [Tamil]
இலங்கையின் தலை சிறந்த விளையாட்டு வீராங்கனைகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டு உள்ளார் தர்சினி சிவலிங்கம். நாட்டின்

Read More >

Jul 26 2012 12:18:17 [Tamil]
அஜித் நடித்து வெளியாகியிருக்கும் பில்லா 2 திரைபடம் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்ட நாளில், அஜித்தின் அட்டை உருவத்திற்கு பாலூற்றி;க் களித்திருக்கின்றனர் யாழ்ப்பாண ரசிகர்கள்.

Read More >

Jul 07 2012 08:22:03 [Tamil]
தமிழகத்தின் ௭திர்ப்பினால் பயிற்சிகளை இடைநடுவில் நிறுத்தி இலங்கை விமானப்படையின் ஒன்பது அதிகாரிகளை திருப்பியனுப்ப இந்திய மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையானது கவலையளிக்கின்றுது. ௭ன்று

Read More >

Jul 07 2012 08:13:35 [Tamil]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் தமிழ் மக்களுக்கு அதிக அளவில் நன்மை செய்ய முடியும் என்று இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அமெரிக்க அரசாங்கத்துக்கு தெரியப்படுத்தியதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம்

Read More >

Jul 06 2012 07:56:16 [Tamil]
இரணைமடு குளத்தில் மீன்பிடி பிடிப்பதற்கு விமானப்படையினர் தடை விதித்துள்ளதால் இக்குளத்தில் மீன்பிடி தொழிலையே நம்பியிருக்கும் கிளிநொச்சி அழகாபுரி கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பெரிதும்

Read More >

Jul 06 2012 07:51:19 [Tamil]
யாழ். உதயன் பத்திரிகை ஆசிரியர் பிரேம்நாத் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரிக்கவோ அது தொடர்பாக மேலதிக நடவடிக்கை எடுக்கவோ முடியாத அளவிற்கு யாழ். நீதவான் கணேசராசாவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்

Read More >