இலவச வைபை மூலம் அரசு அதிகாரியாக அமரப்போகும் ரெயில்வே கூலித்தொழிலாளி

Facebook Cover V02
railway-WiFiகடந்த 2016-ம் ஆண்டு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் இலவச வைபை வசதி ஏற்படுத்தப்பட்டது. கேரள மாநிலம் எர்ணாகுளம் ரெயில் நிலையத்திலும் இந்த வசதி அமைக்கப்பட்டது. இந்நிலையில், அங்கு சுமை தூக்கும் கூலி தொழிலாளியான ஸ்ரீநாத் என்பவர் இலவச வைபை மூலம் அரசு அதிகாரியாக அமர உள்ளார்.
மூணாறு பகுதியை சேர்ந்த ஸ்ரீநாத் பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், அடுத்து படிக்க வசதி இல்லாததால் எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் சுமை தூக்கும் வேலை செய்து வருகிறார். தனது செல்போனில் வைபை இணைத்து, ஒரு ஹெட்செட் மூலம் பாடங்களை கேட்டு படித்து வந்துள்ளார்.
மேலும் பழைய வினாத்தாள், கேள்விகள் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து ஓய்வு நேரத்தில் படித்துள்ளார். இணையதளங்களில் போட்டித்தேர்வுக்கான பாடங்கள் ஆடியோவாக கிடைக்கும் நிலையில், சுமை தூக்கிச்செல்லும் போது கூட பாடங்களை காதில் கேட்டு மனதில் உள்வாங்கியுள்ளார். சமீபத்தில், கேரள அரசுப்பணியாளர் தேர்வாணையம் தேர்வு முடிவுகளை வெளியிட்ட நிலையில், ஸ்ரீநாத் இந்த தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளார்.
நேர்முகத்தேர்விலும் ஸ்ரீநாத் தேர்ச்சி பெற்றுவிட்டால், நில அளவைத்துறையில் கள உதவியாளர் பணி அவருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த தேர்வு மட்டுமல்லாமல் ரெயில்வே துறையில் நடக்க உள்ள குரூப் டி பணிக்கும் அவர் விண்ணப்பித்துள்ளார்.

Share This Post

Post Comment