நீண்ட காலக் கடனில் கார் வாங்குவதற்கு முன் யோசிங்க – நிபுணர்கள் அறிவுரை !!

ekuruvi-aiya8-X3

புதிது புதிதாக வரும் கார்களை பிர்யப்பட்டு வாங்க நினைக்கும் நடுத்தர வர்க்கத்தினர் பலர் மாதத் தவணை குறைவாக இருக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்புடன் நீண்ட காலக் கடன்களை தெரிவு செய்வதாகவும் உண்மையில் இது போன்ற நீண்ட காலக் கடன்களால் உங்களுக்கு இழப்பே அதிகம் என்பதால் வாங்குவதற்கு முன்னர் யோசிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

7 வருடங்களுக்கும் மேல் தவணை கட்டுவது போன்ற கடன்களை வாங்கினால் வட்டியை பல மடங்கு அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள் செலுத்தும் தொகை முழுவதுமே ஒரு குறிப்பிட்ட கால கட்டங்கள் வரை வட்டி அதிகமாகவும் வெறும் சொற்பத் தொகை மட்டுமே கடனுக்குரிய தொகையாகவும் கழிக்கபப்ட்டு வரும் என்பதால் பலவேறு கடன்களை பரிசீலித்து குறுகிய அல்லது நடுத்தர கால கடன்களை மட்டுமே வாங்க வேண்டும் எனவும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் கடன் வாங்கும் நபர்களால் சேமிக்க முடியாமல் போவதோடு நீண்ட காலத்திற்கு பழைய கடன்களை கட்டிக் கொண்டே இருக்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டு விடும் எனவும் எச்சரித்துள்ளனர்.  கார்களில் அதிக  முதலீடு  செய்ய முடியாத நிலையில் இருப்போர் உயர் ரக கார்களை வாங்குவதைத் தவிர்த்து அணைத்து அம்சங்களையும் கொண்ட விலை குறைவான நிறுவனக் கார்களை வாங்குவதே நல்லது என்றும் பரிந்துரைக்கப்படுகிறதுnyzb126-24_2010_111035_high

Share This Post

Post Comment