டெல்லி காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவியாக முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா முகர்ஜி

ekuruvi-aiya8-X3

Sharmishtha-தலைநகர் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவியாக முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஷ்தா முகர்ஜி சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவி பொறுப்பு ஏற்கும் நிகழ்ச்சி நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், ஷர்மிஷ்தா முகர்ஜி தனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் மாகென் மற்றும் டெல்லியின் முன்னாள் முதல் மந்திரி ஷீலா தீட்சித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது ஷீலா தீட்சித் பேசுகையில், ஷர்மிஷ்தா தலைமையின் கீழ் காங்கிரஸ் மகளிர் அணி சிறப்பாக வழிநடத்தப்படும் என தெரிவித்தார்.

Share This Post

Post Comment