கம்ப்யூட்டர்கள் செயலிழந்தன: உலகம் முழுவதிலும் டெல்டா விமானங்கள் தரையிறக்கம்

deldaகம்ப்யூட்டர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்டா ஏர்லைன்ஸ் விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளதால், அதன் விமான சேவைகள் உலகம் முழுவதும் தாமதமாகியுள்ளது.

கம்ப்யூட்டர்கள் செயலிழந்தன: உலகம் முழுவதிலும் டெல்டா விமானங்கள் தரையிறக்கம்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் விமான சேவைகளை வழங்கும் முக்கிய நிறுவனமாக டெல்டா ஏர்லைன்ஸ் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில், இன்று அந்நிறுவனத்தின் விமானங்களை கட்டுப்படுத்தும் கம்ப்யூட்டர் தொழில்நுட்ப அமைப்பு செயலிழந்ததால் உலகம் முழுவதிலும் புறப்படுவதற்கு தயாராக இருந்த அதன் விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் உலகம் முழுவதிலும் அந்நிறுவனத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ள விமானங்கள் மட்டும் வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றது.

அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள விமான நிலையங்களில் செக்-இன் பகுதியில் நீண்ட நேரம் பயணிகள் காத்திருப்பது தொடர்பான புகைப்படங்களையும் டுவிட்டர் மூலம் பலர் வெளியிட்டனர்.

‘அனைத்து இடங்களிலும் எங்களுடைய தொழில்நுட்ப அமைப்பு செயலிழந்துள்ளது. இந்த பிரச்சனை நீண்ட நேரம் நீடிக்காது என நம்புகிறோம்.’ என்று டெல்டா ஏர்லைன்ஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் முடங்கியது ஹேக்கிங் முயற்சியாகக் கூட இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால், இதுபற்றி விமான நிறுவனம் உறுதியான தகவல் தெரிவிக்கவில்லை.


Related News

 • பெல்ஜியம் நாட்டில் ஆசிய, ஐரோப்பிய நாடுகள் மாநாட்டில் வெங்கையா நாயுடு பங்கேற்பு
 • பார்வையாளர்களின் கேள்விகளுக்கு ருசிகரமாக பதில்களை அளிக்கும் சோபியா ‘ரோபோ’
 • அமெரிக்காவின் கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்க உள்ளதாக தகவல்
 • பேஸ்புக் நிறுவனர் மார்க் சூகர்பெர்க் சேர்மன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறாரா?
 • 7 நிமிட சித்ரவதை பத்திரிகையாளர் தலை துண்டித்து கொலை – ஆதாரம் உள்ளது துருக்கி
 • டிரம்ப் மனைவி சென்ற விமானத்தில் திடீர் புகை – விமானம் அவசரமாக தரையிறக்கம்
 • பாகிஸ்தானில் ஊழல் வழக்கில் கைதான ஷாபாஸ் ஷெரீப், நாடாளுமன்றத்தில் ஆவேசம்
 • உலகம் முழுவதும் முடங்கியது யூடியூப், பயனாளர்கள் அவதி
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *