திரிபுராவில் கம்யூனிஸ்ட் கோட்டை சரிந்தது – தாமரை ஆட்சி மலர்ந்தது

ekuruvi-aiya8-X3
tripuraதிரிபுரா மாநிலத்தில் கடந்த மாதம் 18-ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அங்கு 74 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இதேபோல், கடந்த மாதம் 27-ம் தேதி நடந்த தேர்தலில் மேகாலயாவில் 67 சதவீதமும், நாகாலாந்தில் 75 சதவீதமும் ஓட்டுகள் பதிவானது.
திரிபுராவில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்து வருகிறது. மாணிக் சர்க்கார் முதல்-மந்திரியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில்  3 மாநிலங்களிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணப்பட்டு பின்னர், வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
தொடக்கத்தில் ஆட்சி அமைக்க தேவையான 30 இடங்களில் முன்னணி வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு பா.ஜனதா நெருக்குதல் கொடுத்து பின்னுக்கு தள்ளியது. மாலை 4 மணி நிலவரப்படி பா.ஜனதா 43 இடங்களிலும், கம்யூனிஸ்டு 16 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. தொடர்ந்து பா.ஜனதா முன்னணி வகித்து வருவதால் அந்த கட்சியே ஆட்சி அமைப்பது உறுதியானது.
இதையடுத்து, பா.ஜ.க. தொண்டர்கள் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தங்களது வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதையடுத்து, வடகிழக்கில் அமைந்துள்ள திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.வுக்கு அமோகமாக வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
திரிபுரா சட்டசபையில் கடந்த முறை பா.ஜ.க.வுக்கு ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கம்யூனிஸ்டு கோட்டையில் சரிவு ஏற்பட்டு பா.ஜனதா செல்வாக்கு அதிகரித்து வருவதையே இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தி உள்ளது என பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.

Share This Post

Post Comment