அடுத்த வாரம் கொழும்பு வரவுள்ளார் இந்திய இணை அமைச்சர்!

ekuruvi-aiya8-X3

nirmala-seetharaman-1இந்தியாவின் வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்வரும் 26ஆம் திகதி கொழும்புக்குப் பயணம் செய்யவுள்ளதாக அராசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 26ஆம் திகதி கொழும்பு வரும் அவர் 28ஆம் திகதிவரை சிறீலங்காவில் தங்கியிருக்கவுள்ளார்.

சிறீலங்காவின் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவை எதிர்வரும் 27ஆம் திகதி இந்திய இணை வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார்.

இந்தச் சந்திப்பின் போது, இந்தியா- சிறிலங்கா இடையில் செய்து கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ள பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்பாடு குறித்து விரிவாக கலந்துரையாடப்படும் என்று தெரிய வருகிறது.

Share This Post

Post Comment