உத்தரபிரதேச மருத்துவமனையில் நோயாளிக்கு ஆப்ரேஷன் செய்த 8-ம் வகுப்பு மாணவர்

Facebook Cover V02

8th-student-operationஉத்தரபிரதேச மாநிலத்தில் மருத்துவ அலட்சியம் தொடர்பான செய்திகள் வெளியாவது ஒன்றும் புதியது கிடையாது. இப்போது, ஷாமிலி மாவட்டத்தில் உள்ள ‘ஆர்யன் ஹாஸ்பிடல்’ என்ற தனியார் மருத்துவமனையில் 8-ம் வகுப்பு மாணவர் நோயாளிக்கு ஆப்ரேஷன் செய்தது தொடர்பான வீடியோ வைரலாக பரவி வருகிறது. 8-ம் வகுப்பு மாணவர் மருத்துவமனை நிர்வாகியின் மகன் என்பது தெரியவந்துள்ளது. மாவட்ட மருத்துவ அதிகாரி அசோக் குமார் ஹாந்தா பேசுகையில், மருத்துவமனை இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறை கிடையாது என குறிப்பிட்டுள்ளார்.

“வைரலாகும் வீடியோவின்படி ஆப்ரேஷன் தியேட்டரில் மக்கள் நிற்கும் காட்சிகள் இடம் பெற்றது, அவர்களுக்கு அனுமதி கிடையாது.” என தெரிவித்துள்ளார்.

ஆரியன் மருத்துவமனைக்கு சீல் வைக்கும் நடவடிக்கை தொடங்கி விட்டது. இந்த காட்சிகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால் சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். இதற்கிடையே விசாரணையும் தொடங்கியுள்ளது.

‘ஆர்யன் ஹாஸ்பிடல்’ ஏற்கனவே முறைகேடுகள் காரணமாக மூன்று முறை சீல் வைக்கப்பட்டு உள்ளது, ஆனால் அரசியல் செல்வாக்கு காரணமாக மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது என தகவல்கள் குறிப்பிடுகிறது.

கடந்த ஒருவருடத்தில் மருத்துவமனையில் 24 நோயாளிகள் உயிரிழந்து உள்ளார்கள். உயிரிழந்த நோயாளிகளின் உறவினர்கள் மூவர் மருத்துவமனைக்கு எதிராக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 304-ன் (அலட்சியம் மற்றும் கவனமின்மை காரணமாக ஏற்படும் மரணம்) கீழ் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மனித உயிர்களுடன் விளையாட்டா? அரசாங்கம் முறையான நடவடிக்கை எடுக்குமா?

Share This Post

Post Comment