ரசிகர்களையும் என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது- ரஜினிகாந்த் அறிக்கை

கடந்த 23 ந்தேதி ரஜினிகாந்த்  வெளியிட்டு இருந்த ஒரு அறிக்கையில் வெறும் ரசிகர்மன்றத்தை வைத்துக்கொண்டு அரசியலில் நாம் நினைத்ததை சாதிக்கமுடியும் என்று யாராவது நினைத்தால், அவரது புத்தி பேதலித்துள்ளது என்றுதான் அர்த்தம் என்று ரஜினிகாந்த்  குறிப்பிட்டிருந்தார். ரஜினியின் இந்தக் கருத்துக்கு அப்பாவி ரசிகன்  என்ன சொல்கிறான் என்பது போல் அது எழுதபட்டு உள்ளது.

‘30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிடமுடியாது என்று அறிக்கையில் சொல்லியிருந்தார் ரஜினி.

இதற்கு, அப்பாவி ரசிகன் ‘நீ திரையில் தோன்றியபோது கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து விசில் எழுப்பி, ஆரவாரக் கூச்சல் போட்டு வாழ்க கோஷம் முழக்கிய எங்களைத் தகுதியற்ற கூட்டமாக்கிவிட்டாயே தலைவா. உன் மனசாட்சி இதை எப்படி ஏற்கிறது? 30,40 வருடங்கள் திரையில் நடித்தது மட்டுமே முதல்வர் ஆவதற்கு தகுதி என நீ கருதும்போது, இத்தனை ஆண்டு காலம் உன்னை, உயர்த்திப் பிடித்த எங்களுக்கு அரசியலில் ஈடுபடத் தகுதி இல்லை என்பது எத்தகைய நியாயம் தலைவா? என்று எழுதப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மே மாதம் நடந்த ரசிகர்கள் சந்திப்பின் போதே, நான் அரசியலுக்கு வந்தால் அதை வைத்து பதவி வாங்கணும், பணம் சம்பாதிக்கணும்’ என்ற எண்ணத்தோடு இருப்பவர்களை அருகிலேயே சேர்க்கமாட்டேன், அப்படிப்பட்டவர்கள் இப்போதே விலகிவிடுங்கள் என்று நான் தெளிவாகக் கூறியிருக்கிறேன் என்று அறிக்கையில் சொல்லியிருந்தார் ரஜினி.

‘அரசியலுக்கு வருவது பதவி வாங்க அல்ல; என்றால் வரும் சட்டசபை தேர்தலில் எல்லா இடங்களிலும் போட்டியிடுவோம் என அறிவித்தது ஏன் தலைவா? பதவிக்காக அரசியல் இல்லை என்றால் பெரியாரைப் போல கட்சி ஆரம்பித்து கொள்கையிலே உறுதியாக நின்று போராடவேண்டியதுதானே. உங்களுக்கு மட்டும் முதல் அமைச்சர் பதவி வேண்டும், நாங்கள் எல்லாம் அதற்கு நாயாய் பேயாய் உழைக்கவேண்டும், ஆனால் நாங்கள் மட்டும் பதவி ஆசைபடக்கூடாது என்பது எந்த ஊர் நியாயம் தலைவா? என்று கேட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் நான் கடந்த 23 ந்தேதி வெளியிட்ட அறிக்கையில் மக்கள் மன்ற செயல்பாடுகள் குறித்து சில உண்மைகளை சொல்லி இருந்தேன். அது கசப்பாக இருந்தாலும் அதில் உள்ள உண்மையையும் நியாயத்தையும் புரிந்து கொண்டதற்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

உங்களை போன்ற ரசிகர்களை அடைந்ததற்கு நான் பெருமைப்படுகிறேன். ரசிகர்களையும் என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நாம் எந்த பாதையில் போனாலும் அந்த பாதை நியாயமானதாக இருக்கட்டும். ஆண்டவன் நமக்கு துணை இருப்பான். என ரஜினிகாந்த் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.


Related News

 • பா.ஜ.க. ஆபத்தான கட்சியா என்ற கேள்விக்கு ரஜினிகாந்த் பரபரப்பு பதில்
 • மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தார்
 • இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது
 • உலகின் உயரமான வல்லபாய் படேல் சிலைக்கு நிதியுதவி வழங்கியது யார்?
 • ஆயுதங்களை பயன்படுத்தாத சதிப்புரட்சியே இலங்கையில் அரங்கேறுகிறது – சபாநாயகர்
 • புதிய பிரதமர் நியமனம் அரசியலமைப்புக்கு உட்பட்டது
 • அதிகார போதையில் தடுமாறும் மைத்திரி!
 • தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுக்க கடுமையாக உழைப்பேன் – டக்லஸ்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *