ரெயில்வே பயணிகளுக்கு அமிதாப் பச்சன் அறிவுரை

மும்பையில் ரெயில் விபத்துகளில் சிக்கி பலியானவர்கள் குறித்த தகவல் சமீபத்தில் வெளியானது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியான இந்த தகவலின் படி கடந்த 2013-ம் ஆண்டு முதல் கடந்த ஆகஸ்டு மாதம் வரை மும்பையில் ரெயில் விபத்துகளில் சிக்கி 18 ஆயிரத்து 423 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 18 ஆயிரத்து 847 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
இந்நிலையில் பயணிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய ரெயில்வே வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அந்த வீடியோவில் நடிகர் அமிதாப் பச்சன் ரெயில் பயணிகள் பாதுகாப்பு குறித்து பேசுகிறார். 2 நிமிடங்கள் ஓடும் அந்த வீடியோவில் அமிதாப் பச்சன், பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல நடைமேம்பாலங்களை பயன்படுத்த வேண்டும், விதிமுறைகளை பின்பற்றுங்கள் என பொதுமக்களுக்கு அறிவுரை கூறுகிறார். மேலும் 2 வயதில் முதன் முதலில் பார்த்த ரெயில் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.





Related News

  • சர்கார் – வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்
  • ‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது
  • ரஜினியின் 2.0 வெளியிடுவோம் – தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்
  • சர்கார் படம் முதல் நாள் ரூ. 66.6 கோடி ரூபாய் வசூல்
  • சர்கார் முதல் நாள் வசூல் காலா, பாகுபலியை தாண்டி சாதனை
  • சினிமா பின்னணி இல்லாதவர்கள் ஜெயிப்பது கஷ்டம் – அமிரா தஸ்தூர்
  • சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள்
  • என்னை படுக்கைக்கு அழைத்த பெரிய டைரக்டர் – யாஷிகா புகார்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *