ஆந்திரப் பிரதேச அரசின் என்.டி.ஆர். விருதுக்கு கமல், ரஜினி தேர்வு

Thermo-Care-Heating

rajini_Kamalஆந்திரப்பிரதேச அரசின் என்.டி.ஆர். தேசிய திரைப்பட விருதான நந்தி விருது 2014-ம் ஆண்டு கமல்ஹாசனுக்கும், 2016-ம் ஆண்டு ரஜினிகாந்த் ஆகியோருக்கும் வழங்கப்பட உள்ளது.

ஆந்திர அரசின் சார்பில் என்.டி.ஆர். தேசிய திரைப்பட விருதுகள் திரைப்பட துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும். இந்த ஆண்டு என்.டி.ஆர். விருது அறிவிக்கப்ப்ட்டுள்ளது. 2014-ம் ஆண்டுக்கு தமிழகத்தை சேர்ந்த கமல்ஹாசன், 2015-ம் ஆண்டுக்கு ராகவேந்திரா ராவ், 2016-ம் ஆண்டுக்கு ரஜினிகாந்த்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய விருது பெற்ற பாகுபலி திரைப்படம் 2015-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் பெல்லி சூப்புலு தேர்வாகியுள்ளது. 2014-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான லிஜெண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் தலைவராக திரைப்பட நடிகரும், நந்தமூரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா செயல்பட்டு வருகிறார். இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் பட்டியலுக்கு ஆந்திரப்பிரதேச முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

என்.டி.ஆர். தேசிய விருது 5 லட்சம் ரூபாய் பணத்துடன் நினைவு பரிசும் வழங்கப்படும். வரும் ஜனவரி மாதம் விஜயவாடாவில் விருதுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், என்.டி.ஆர் தேசிய விருதுக்கு என்னை தேர்வு செய்த ஆந்திர அரசுக்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் கூறுகையில், 2016-ம் ஆண்டுக்கு என்.டி.ஆர் தேசிய விருதுக்கு என்னை தேர்வு செய்த ஆந்திர அரசுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

ஆந்திர அரசின் விருதுக்கு ரஜினிகாந்த்  தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment