ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகிறது ரஜினியின் ‘காலா’

Facebook Cover V02
kaalaநடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடத்துள்ள காலா படத்தின் படபிடிப்பு கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் தொடங்கியது. அதேசமயம் டைரக்டர் சங்கர் இயக்கத்தில் வெளியான எந்திரன் படத்தின் 2-ம் பாகம் ‘2.0’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு படங்களில் எந்த படம் முதலில் வெளிவரும் என்பதில் பெரும் குழப்பம் நீடித்துவந்தது. இந்நிலையில், ‘காலா’ திரைப்படம் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த தகவலை இப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
2.0 வின் கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் நிறைவடையாததால் காலா படம் முன்னதாக வெளியாகிறது என கூறப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment