அமெரிக்காவில் விஜய் படப்பிடிப்பு ரத்து

Facebook Cover V02
vijay-shootingஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் ‘சர்கார்’ படப்பிடிப்பை கடந்த சில மாதங்களாக சென்னையிலும், வெளிமாநிலங்களிலும் நடத்தி முடித்தனர். பின்னர் இறுதிகட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்கள். லாஸ்வேகாஸில் முக்கிய காட்சிகளை படமாக்கி வந்தனர்.

அமெரிக்காவில் உயர்ந்த பதவியில் இருக்கும் விஜய் சென்னை திரும்பி விவசாயிகள் நலனுக்காகவும், ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் போராடுவதுபோல் திரைக்கதை அமைத்து இருப்பதால் அவரது அமெரிக்க வாழ்க்கையை பெரிய ஓட்டல்கள், நிறுவனங்களில் படமாக்கினார்கள்.

இந்த நிலையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மரணம் அடைந்த செய்தியை கேள்வியுற்றதும் உடனடியாக சர்கார் படப்பிடிப்பை நிறுத்தினார்கள். இதுபோல் தமிழகம் முழுவதும் நடந்து வந்த படப்பிடிப்புகளும் நேற்று ரத்து செய்யப்பட்டன. வெளிமாநிலங்களிலும் படப்பிடிப்புகள் நடக்கவில்லை.

Share This Post

Post Comment