விமான விபத்திலிருந்து தப்பித்த சன்னி லியோன்

sunny_Leonபாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம்வரும் சன்னி லியோனுக்கென்று உலகமெங்கிலும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. இந்நிலையில், சன்னிலியோன் தனது கணவர் மற்றும் நண்பர்களுடன் பயணித்த தனியார் விமானம் ஒன்று மோசமான வானிலையால் விபத்து ஏற்படும் நிலைக்கு சென்று கடைசியில் உயிர் பிழைத்து வந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, நாங்கள் பயணித்த தனியார் விமானம் ஒன்று மோசமான வானிலையில் சிக்கி, கிட்டத்தட்ட விபத்து ஏற்படும் நிலைக்கு சென்றுவிட்டது. விமானி ரொம்பவும் சிரமப்பட்டு எங்களுடைய விமானத்தை பத்திரமாக தரையிறக்கிவிட்டார்.

இந்த நேரத்தில் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம். இந்த மாதிரியான தருணத்தில் விமானியும் கடவுளை வேண்டியிருந்தால் எங்களுடைய நிலைமையை யோசித்துதான் பார்க்கவேண்டும் என்று நகைச்சுவையுடனும் கூறியுள்ளார்.

மேலும், நாங்கள் இப்போது உயிருடன் இருக்கிறோம். எங்களுடைய வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருக்கிறோம். எங்களுடைய விமானிக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.






Related News

  • சர்கார் படத்திற்கு எதிராக விஜய் மீது கேரளாவில் வழக்கு
  • சர்கார் – வெற்றியைக் கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர்
  • ‘சர்கார்’ வசூல் ரூ.125 கோடியை தாண்டியது
  • ரஜினியின் 2.0 வெளியிடுவோம் – தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் மிரட்டல்
  • சர்கார் படம் முதல் நாள் ரூ. 66.6 கோடி ரூபாய் வசூல்
  • சர்கார் முதல் நாள் வசூல் காலா, பாகுபலியை தாண்டி சாதனை
  • சினிமா பின்னணி இல்லாதவர்கள் ஜெயிப்பது கஷ்டம் – அமிரா தஸ்தூர்
  • சர்வதேச திரைப்பட விழாவில் பரியேறும் பெருமாள்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *