ராதிகா ஆப்தே அதிர்ச்சி – ஏன்?

Thermo-Care-Heating

rat_apteபிரகாஷ் ராஜ் ஜோடியாக ‘தோனி,’ கார்த்தியுடன் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படங்களில் நடித்தவர் ராதிகா ஆப்தே. சமீபத்தில் வெளியான ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து இருந்தார். இந்தி, தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். கவர்ச்சி காட்சிகளில் ராதிகா ஆப்தே துணிச்சலாக நடிக்கிறார். அவரது ஆபாச படங்கள் இணையதளங்களில் தொடர்ந்து பரவி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு ஆடையில்லாமல் அவர் குளிப்பது போன்ற படங்கள் வந்தன. ஆடையை விலக்குவதுபோல் இன்னொரு ஆபாச படமும் வந்தது. ஹாலிவுட் படத்தில் நிர்வாணமாக நடித்த காட்சிகளும் வெளி வந்தன. கதைக்கு தேவைப்பட்டதால் அந்த காட்சியில் நடித்தேன் என்றும் இந்தியாவில் அதை நீக்கி விட்டு படத்தை திரையிடுவார்கள் என்றும் அவர் கூறினார்.

அந்த சர்ச்சை அடங்கும் முன் அனுராக் கஷ்யப் இயக்கிய குறும்படத்தில் அவர் நிர்வாணமாக நடித்த காட்சிகள் படம் திரைக்கு வருவதற்கு முன்பே இணையதளங்களில் கசிந்தது. 20 நிமிடங்கள் அந்த ஆபாச படம் ஓடியது. இது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. யாரோ இந்த காட்சிகளை திருடி வெளியிட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து படத்தின் இயக்குனர் அனுராக் காஷ்யப் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் ‘பார்ச்டு’ என்ற படத்தில் அவர் நடித்துள்ள இன்னொரு செக்ஸ் காட்சியும் இணையதளங்களில் பரவி உள்ளது. இதனை பலர் பதிவிறக்கம் செய்து பார்க்கிறார்கள். வாட்ஸ் அப்களிலும் அனுப்புகின்றனர்.

ராதிகா ஆப்தேவின் செக்ஸ் படம் என்ற பெயரில் அவர் நடித்ததாக வெளி வந்த ஆபாச காட்சிகளை தொகுத்து சி.டி. மற்றும் டி.வி.டிக்களாக மும்பையில் பலர் விற்பனை செய்து வருகிறார்கள். இந்த சி.டி.க்கள் அமோகமாக விற்பனையாவதாக கூறப்படுகிறது.

இதனால் ராதிகா ஆப்தே அதிர்ச்சி அடைந்து உள்ளார். தனது பெயரில் போலியாக அந்த செக்ஸ் சி.டிக்கள் விற்பனை செய்யப்படுவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் செய்வது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

ideal-image

Share This Post

Post Comment