65-வது தேசிய விருதுகள் அறிவிப்பு – சிறந்த நடிகர், நடிகையாக ரிதி சென், ஸ்ரீதேவி தேர்வு

ekuruvi-aiya8-X3

sridevi_rithi65-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் 2 விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த நடிகர் விருது நகர்கிர்தன் படத்தில் நடித்த ரித்தி சென்னுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த நடிகையாக மறைந்த நடிகை ஸ்ரீதேவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாம் படத்தில் ஸ்ரீதேவி அம்மாவாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் மாம் வெளியாகியது. இளைஞர் ஒருவரால் ஏமாற்றப்படும் தனது மகளை தேற்றும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஸ்ரீதேவி கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஸ்ரீதேவி மறைவு சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Share This Post

Post Comment