‘சைத்தான்’ டீசரை நீக்கிய விஜய் ஆண்டனி

ekuruvi-aiya8-X3

vijay_antonyவிஜய் ஆண்டனி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘சைத்தான்’. இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அருந்ததி நாயர் நடித்துள்ளார். மேலும் மீரா கிருஷ்ணன், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள். இப்படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்து இசையமைத்துள்ளார்.

‘சைத்தான்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு பெற்றது. இந்நிலையில், பேஸ்புக், யூடியூப், டுவிட்டர் ஆகிய சமூக வலைத்தளங்களில் விஜய் ஆண்டனி தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவு செய்து வைத்திருந்த ‘சைத்தான்’ பட டீசரை திடீரென நீக்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ‘நான் நடித்து வெளிவர இருக்கும் ‘சைத்தான்’ பட டீசர் வீடியோவின் இசையில் ஒலிக்கும் மறைந்த பாடலாசிரியர் அண்ணாமலையின் வரிகள், சமஸ்கிருத மந்திரம் ஒன்றின் சாயலை ஒட்டி இருப்பதால் சிலர் மனவருத்ததுக்கு உள்ளானதை நான் அறிந்தேன்.

அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க அந்த வரிகளை உடனடியாக மாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளேன். எனது யூடியூப், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் இன்று நீங்கள் ‘சைத்தான்’ டீசரை காண முடியாது. புதிய வரிகளுடன் பாடல் பதிவு செய்து, நாளை மாலை 7 மணிக்கு சைத்தான் டீசரை வெளியிடுகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment