தியேட்டரின் உள்ளே ராக்கெட் விட்ட ரசிகர்கள்

ekuruvi-aiya8-X3

rocket_Theatreநடிகர் சல்மான் கான் நடித்துள்ள ‘டியூப் லைட்’ திரைப்படம் நாடு முழுவதும் இன்று வெளியானது. இந்நிலையில், மராட்டிய மாநிலம் மேலகானில் உள்ள ஒரு தியேட்டரில் இன்று முதல்நாள் காட்சி பார்த்த ரசிகர்கள், சல்மான் கானை திரையில் கண்டதும் ஆர்வமிகுதியில் பெரிய சைஸ் ராக்கெட் வெடியை தியேட்டரின் உள்ளேயே வெடித்துள்ளனர்.

தரையிலிருந்து சீறிப்பாய்ந்த ராக்கெட் வெடியானது தியேட்டரின் கூரையை பதம்பார்த்துள்ளது. தீவிபத்து ஏற்படும் அபாயம் நிலவியதால் காட்சி நிறுத்தப்பட்டது. பின்னர், வெடி அணைக்கப்பட்ட பின் மீண்டும் காட்சி திரையிடப்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

Share This Post

Post Comment