ரூ.2 கோடி கேட்கும் வடிவேலு

ekuruvi-aiya8-X3

vadivelu28உலக தமிழர்களையே சிரிக்க வைக்கும் வடிவேலு தயாரிப்பாளரை கதற விடலாமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. எல்லாம் இம்சை அரசன் 2 படத்திற்கு ஏற்பட்ட சிக்கல் தான். வடிவேலு சிம்புதேவன் ‌ஷங்கர் கூட்டணியில் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற படம் இம்சை அரசன் 23-ம் புலிகேசி.
இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டார்கள். படப்பிடிப்பு தொடங்கி 8 நாட்கள் சென்ற நிலையில் வடிவேலு படக்குழுவினரிடம் கோபம் கொண்டு படப்பிடிப்பை புறக்கணித்து விட்டார். ஆடை வடிவமைப்பாளரில் தொடங்கிய சிக்கல் வடிவேலுக்கு தடை விதிக்கும் அளவுக்கு சென்றுவிட்டது. தயாரிப்பாளர் சங்கர் வடிவேலுவால் தனக்கு இழப்பான ரூ.9 கோடியை அவரிடம் இருந்து வாங்கி தர வேண்டும் என்று புகார் கொடுத்து இருக்கிறார்.
விஷால் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தொடக்கத்தில் பிடி கொடுக்காமல் பேசிய வடிவேலு இப்போது மேலும் ரூ.2 கோடி வாங்கிக் கொடுத்தால் படத்தில் நடிக்க தயார்’ என்று கூறி இருக்கிறார். இந்த சிக்கலை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் விழிக்கிறது சங்கம். விரைவிலேயே வடிவேலு நடிக்க தடை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Post

Post Comment