சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாகும் பிரகாஷ் ராஜ்

Thermo-Care-Heating

prakash_28தமிழ், தெலுங்கு உலகில் முன்னணி வில்லனாக வலம் வந்தவர் பிரகாஷ் ராஜ். இவர் தற்போது மலையாளத்தில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் மோகன்லாலுக்கு வில்லனாக நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் மெகா பட்ஜெட்டில் உருவாகும் ‘ஒடியன்’ என்ற படத்தில் மோகன்லால் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தை ஸ்ரீகுமார் என்பவர் இயக்குகிறார். மஞ்சு வாரியர் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். மலையாள படங்களிலேயே இதுவரைக்கும் எந்த படத்திற்கும் இல்லாத அளவுக்கு இந்த படத்தின் பட்ஜெட் அமைந்துள்ளது. பீட்டர் ஹெயின் இப்படத்தின் சண்டைக் காட்சிகளை அமைக்கவுள்ளார். சாபு சிரில் ஆர்ட் இயக்குனராக பணியாற்றுகிறார்.

சாஷி குமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் 3 டி தொழில்நுட்பத்தில் உருவாகவிருக்கிறது. ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் சார்பில் அந்தோணி பெரும்பாவூர் இப்படத்தை தயாரிக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருக்கின்றனர்.

ideal-image

Share This Post

Post Comment