சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு நடிக்க வரும் சனா

Facebook Cover V02
sana_27‘ராஜபாட்டை’ படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சனா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது சின்னத்திரையில் நடிக்க இருக்கிறார்.
இதுகுறித்து சனா கூறும்போது, ‘நான் இதுவரை 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். தமிழில் ‘ராஜபாட்டை’ திரைப்படம் எனக்கு சிறந்த பெயரை பெற்றுத்தந்தது. தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்தாலும், எனக்கு ஏற்ற கதாபாத்திரத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறேன். அதுபோல், சின்னத்திரையிலும் பலர் நடிக்க அழைக்கிறார்கள். பல கதைகள் கேட்டேன். அதில் ஒன்று மட்டும் எனக்கு மிகவும் பிடித்தது.
இதையடுத்து ஒரு மெகா சீரியலில் நான் நடிக்கிறேன். இந்த தொடர் மூலம் வீட்டில் இருக்கும் மங்கையர், சிறியவர்கள், பெரியவர்கள் உள்ளத்தில் இடம் பிடிக்க இருக்கிறேன். இது ஒரு குடும்பகதை” என்றார்.

Share This Post

Post Comment