விஜய் தலைவராக உருவாகி நம்பியுள்ளவர்களுக்கு மாற்றத்தை தர வேண்டும் – சந்திரசேகர்

ekuruvi-aiya8-X3

chandrasekarவிஜய் நடித்து வெளிவந்துள்ள “மெர்சல்” திரைப்படத்தில் உள்ள சில கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அரசியல் கட்சிகள் ஆதரவு மற்றும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் இதுகுறித்து தனியார் டிவிக்கு விஜயின் தந்தை அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம். விஜய் ஒரு தலைவராக உருவாகி அவரை நம்பியுள்ளவர்களுக்கு மாற்றத்தை தர வேண்டும். நடிகர் விஜயின் மீது மதச்சாயம் பூச வேண்டாம் என அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் அவர் கூறும் போது விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம்.அரசியலுக்கு வருவது குறித்து விஜய் தான் முடிவெடுக்க வேண்டும்.

படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக தயாரிப்பாளர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

சினிமாவை சினிமாவாகவும், அரசியலை அரசியலாகவும் பார்க்க வேண்டும்

Share This Post

Post Comment