உலகம் முழுவதும் 1700 திரையரங்குகளில் வெளியாகும் காஷ்மோரா

ekuruvi-aiya8-X3

kashmoraகார்த்தி நடிப்பில் ‘காஷ்மோரா’ என்ற படம் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. கார்த்தி படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் அமைந்த படம் இதுதான். இப்படத்தில் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ‘ரௌத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ ஆகிய படங்களை இயக்கிய கோகுல் இயக்கியுள்ளார்.

வருகிற தீபாவளியையொட்டி அக்டோபர் 28-ந் தேதி உலகமெங்கும் இப்படம் வெளிவரவிருக்கிறது. உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 1700 திரையரங்குகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது. கார்த்தி படம் இத்தனை திரையரங்குகளில் திரையிடப்படுவது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரபு, எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக வெளியிடுகிறது. மேலும், சினி கேலக்ஸி, ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட், ஏ.பி.இண்டர்நேஷனல், பிவிபி சினிமா உள்ளிட்ட பிரம்மாண்ட விநியோகஸ்தர்களும் உலகின் பல இடங்களின் இப்படத்தை விநியோகம் செய்கிறார்கள்.

Share This Post

Post Comment