பைரவா – படப்பிடிப்புக்கு பலத்த பாதுகாப்பு

sdsd

bairavaதெறி’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்த விஜய், பரதன் இயக்கத்தில் ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது.

இந்நிலையில், பைரவா படக்குழு தற்போது சுவிட்சர்லாந்தில் விஜய்-கீர்த்தி சுரேஷ் பங்கேற்கும் பாடல் காட்சி ஒன்றை படமாக்கி வருகிறது. இந்நிலையில், யாரோ சிலர் சுவிட்சர்லாந்தில் படமாகும் பாடல் காட்சியை வீடியோ படம் எடுத்து அதனை இணையதளத்தில் பதிவு செய்திருக்கிறார்கள்.

அதுமட்டுமில்லாமல், அந்த பாடல் காட்சியில் விஜய்யின் புகைப்படங்களையும் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இது படக்குழுவினரை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால், ‘பைரவா’ படக்குழு தற்போது பலத்த பாதுகாப்புடன் இந்த பாடலின் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

Share This Post

Post Comment