ஜெய்க்காக `பலூன்’ விடும் சிம்பு

ideal-image

baloon_19சினிஷ் இயக்கத்தில் ஜெய் – அஞ்சலி – ஜனனி ஐயர் இணைந்து நடித்திருக்கும் படம் `பலூன்’. காதல் கலந்த திகில் படமாக உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். காமெடி நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கு பின்னர் ஜெய் – அஞ்சலி மீண்டும் இணைந்து நடித்திருப்பதால் பலூன் படத்தின் மீதான எதிர்பாரப்பு கூடியிருக்கிறது. இந்த படத்தில் ஜெய் 3 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

’70 எம் எம்’ நிறுவனத்தின் சார்பில் டி.என்.அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் திலீப் சுப்பராயன் ஆகியோர் இணைந்து தயாரித்து இருக்கும் இந்த ‘பலூன்’ படத்தின் டீசரை இன்று இரவு 8 மணிக்கு நடிகர் சிம்பு வெளியிடுகிறார்.

ideal-image

Share This Post

Post Comment