சீக்கியர் கோவிலுக்கு கவர்ச்சி உடையில் சென்ற சார்மி

Thermo-Care-Heating

sharmiதமிழில் ‘காதல் அழிவதில்லை’, ‘காதல் கிசுகிசு’, ‘லாடம்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை சார்மி. தெலுங்கில் முன்னணி நடிகையான இவர் தெலுங்கு, இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். தற்போது படங்கள் எதுவும் தன் கைவசம் இல்லாததால் நண்பர்களுடன் ஜாலியாக உலகை சுற்றி வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் போர்ச்சுக்கல் சென்ற சார்மி, லிஸ்பனில் உள்ள சீக்கியர் கோவிலுக்கு சென்றார். அப்போது எடுக்கப்பட்ட படங்களை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சார்மி. அதில், தொடை தெரியும் அளவுக்கு உடை அணிந்து அவர் வழிபாட்டு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அவர் தொடை தெரியும் அளவுக்கு சீக்கியர் கோவிலுக்கு சென்று வழிபட்டது ரசிகர்களிடம் பெரும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

ideal-image

Share This Post

Post Comment